சீரழிக்கப்பட்ட சிறுமி; தம்பதியர் கைது

2 mins read
7d92e322-682c-4c38-8ad8-17559fb5a9d7
தமது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகச் சிறுமியின் தாயார் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10ஆம் தேதியன்று காவல்துறையில் புகார் அளித்தார். - படம்: பிக்சாபே

இணையம் மூலம் அறிமுகம் கிடைத்த வயது குறைந்த சிறுமியுடன் பாலியல் உறவு கொண்ட முழுநேர தேசியச் சேவையாளருக்கு (சிங்கப்பூர் காவல்துறை) செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 20) பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

தமது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகச் சிறுமியின் தாயார் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10ஆம் தேதியன்று காவல்துறையில் புகார் அளித்தார்.

தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை சிங்கப்பூரரான 24 வயது மார்க்கஸ் மொசேன் லிம் ஒப்புக்கொண்டார்.

அந்தச் சிறுமிக்கு 13 வயது என்று தெரிந்தும் அவள் வசதி குறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதை தமக்குச் சாதகமாக்கிக்கொண்டு அவளுடன் லிம் பாலியல் உறவு கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அச்சிறுமிக்குப் பணம் கொடுக்க லிம் முதலில் தயாராக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அவளுடன் பாலியல் உறவு கொண்ட பிறகு, அவளுக்கு அவர் பணம் தரவில்லை.

அந்தச் சிறுமி இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மரணம் தொடர்பான விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் இடம்பெறவில்லை.

வயது குறைந்த சிறுமியுடன் லிம் உடல் உறவு கொண்டது தெரிந்தும் அவரது அப்போதைய காதலியான பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த 29 வயது மரிஜா பீட்ரிஸ் கார்கரிட்டா டுப்லே லிம்முடனான உறவை முறித்துக்கொள்ளவில்லை.

அதற்குப் பதிலாக லிம்முடனும் அச்சிறுமியுடனும் இணைந்து பாலியல் உறவில் ஈடுபட அவர் இணங்கினார்.

அச்சிறுமியுடன் லிம் பாலியல் உறவு கொண்டபோது அதை டுப்லே குறைந்தது ஆறு காணொளிகள் எடுத்தார்.

ஆனால் காவல்துறையினர் அவர் வீட்டிற்குச் சென்றபோது அவற்றை அவர் நீக்கிவிட்டார்.

சிறுமியுடன் பாலியல் உறவு கொள்ள லிம்மைத் தூண்டியதற்காக லிம் மீது பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

சிங்கப்பூர் நிரந்தரவாசியான டுப்லேவுக்கு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) எட்டு ஆண்டுகள், ஒன்பது மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்