மான்ட்ஃபொர்ட் தொடக்கப்பள்ளியில் 2028ல் மாணவிகளும் சேரலாம்

மான்ட்ஃபொர்ட் தொடக்கப்பள்ளியில் 2028ல் மாணவிகளும் சேரலாம்

1 mins read
இருபாலினத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஒரே இடத்தில் பயிலும் நடைமுறைக்கேற்ற மாற்றத்தை செய்ய வேண்டியுள்ளது: நிர்வாகம்
36f708b7-c48b-4dff-a557-4df8733633eb
ஹவ்காங் அவென்யு 8ல் உள்ள மான்ஃபொர்ட் தொடக்கப்பள்ளியின் முகப்பு. - படம்: சிஎன்ஏ ஊடகம்

இதுவரை ஆண்கள் மட்டும் பயின்ற மான்ஃபொர்ட் தொடக்கப் பள்ளியில் 2028ஆம் ஆண்டிலிருந்து மாணவிகள் ஏற்றுக்கொள்ளப்படுவர்.

அப்பள்ளி, இருபாலரும் பயிலக்கூடிய வகையில் 2027ஆம் ஆண்டுமுதல் தொடக்கநிலை 1க்கான மாணவிகளின் முன்பதிவுகளை செய்யத்தொடங்கும்.

ஆனால் தொடக்கநிலை 2 முதல் 6க்கான மாணவிகள் சேர்க்கை அங்கு இடம்பெறாது. மேலும், தொடக்கநிலை 1ல் 2028ல் சேரும் மாணவிகள் தொடக்கநிலை 6ஐ முடித்து தேர்ச்சிபெற்றதும் அதே பெயரில் இயங்கும் மொன்ஃபொர்ட் உயர்நிலைப் பள்ளியில் இணைவார்கள். அதன்பிறகு அந்த உயர்நிலைப் பள்ளியும் இருபாலருக்குமான பள்ளியாக மாற்றம்பெறும்.

இதன் விவரங்களை பள்ளி நிர்வாகம் சனிக்கிழமை (ஏப்ரல் 25) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. தற்போது பள்ளியில் பயிலும் மாணவர்களின் சகோதரிகளுக்கும், முன்னாள் மாணவர்களின் பெண் குழந்தைகளுக்கும் பதிவில் முன்னுரிமை வழங்கப்படும் என்பதும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹவ்காங் அவென்யு 8ல் மொன்ஃபொர்ட் தொடக்கப்பள்ளியும் உயர்நிலைப் பள்ளியும் அருகருகே இயங்கிவருகின்றன.

சிங்கப்பூரின் சூழலுக்கு ஏற்றபடி இரு பாலினங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒரே இடத்தில் பயிலும் நடைமுறைக்கேற்ற மாற்றத்தை செய்ய வேண்டியுள்ளது என்று செயின்ட் கேப்ரியல் அறநிறுவனத்தின் தலைவர் லிம் பூன் ஹெங் கருத்துரைத்தார்.

ஆறு பள்ளிகளை நிர்வகிக்கும் கேப்ரியல் அறநிறுவனம்

மொன்ஃபொர்ட் தொடக்க, உயர்நிலைப் பள்ளிகள் உட்பட மொத்தம் ஆறு பள்ளிகளை நிர்வகிக்கும் செயின்ட் கேப்ரியல் அறநிறுவனம், கல்வி அமைச்சுடன் மொன்ஃபொர்ட் உயர்நிலைப் பள்ளியில் பெண்களை சேர்ப்பது குறித்து கலந்துரையாடுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்