ஸ்கில்ஸ்ஃபியூச்சர் இணையவாசலில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டது

1 mins read
88834f0d-95d2-4bfd-9384-d1e70fd6d738
2020ஆம் ஆண்டில் 25 வயது, அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் ஒரே முறை $500 ஸ்கில்ஸ்ஃபியூச்சர் நிரப்புத்தொகையாக வழங்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் அமைப்பின் மைஸ்கில்ஸ்ஃபியூச்சர் (MySkillsFuture) இணையவாசலில் டிசம்பர் 30ஆம் தேதி ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டது.

அந்த அமைப்பின் ஒரே முறை வழங்கப்பட்ட நிரப்புத்தொகையான $500 காலாவதியாவதற்கு ஒருநாள் முன்னதாக இந்தப் பிரச்சினை ஏற்பட்டது.

தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு பாதிக்கப்பட்ட ஸ்கில்ஸ்ஃபியூச்சர் நிரப்புத்தொகை கட்டமைப்பு புதன்கிழமை (டிசம்பர் 31) காலை வழக்கநிலைக்குத் திரும்பியதாக அதன் இணையவாசல் தெரிவித்தது.

2020ஆம் ஆண்டில் 25 வயது, அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் ஒரே முறை $500 ஸ்கில்ஸ்ஃபியூச்சர் நிரப்புத்தொகையாக வழங்கப்பட்டது.

அதனைப் பயன்படுத்த டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாளாகும்.

எனவே அதனைப் பயன்படுத்தி திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கவும் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும் பலர் மைஸ்கில்ஸ்ஃபியூச்சர் இணையவாசலை அணுகினர்.

தொழில்நுட்பக் குழு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்றும் இணையவாசலை மீட்டெடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் டிசம்பர் 30ஆம் தேதி ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் கூறியது.

“பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு அதற்கேற்ப வழிகாட்ட, அவர்கள் பயிற்சிக்காக விண்ணப்பித்த நிலையங்களுடன் நாங்கள் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம்,” என்றும் அது தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்