தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெம்பனிஸ் வட்டாரத்தில் ‘கோ அஹெட்’ பேருந்துச் சேவை

2 mins read
e87e8e6b-bb1b-479c-a265-f7a8c156b69b
கோ-அஹெட் சிங்கப்பூர் நிறுவனம் தெம்பனிஸ் பேருந்து முனையம், தெம்பனிஸ் கான்கோர்ஸ் பேருந்து முனையம், தென்பனித் நார்த் பேருந்து முனையம், சாங்கி பிசினஸ் பார்க் பேருந்து முனையம் ஆகியவற்றையும் நிர்வகிக்கும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோ-அஹெட் சிங்கப்பூர் நிறுவனம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி முதல் தெம்பனிஸ் வட்டாரத்தில் தனது சேவையை வழங்கவுள்ளது.

பேருந்துச் சேவை எண் 10, 23, 81 உள்ளிட்டவற்றை தெம்பனிஸ் வட்டாரத்தில் காணலாம். புதிதாகத் தொடங்கப்பட்ட 299 எண் கொண்ட பேருந்துச் சேவையும் அவற்றில் அடங்கும்.

இந்தப் பேருந்துகள் ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைந்த முனையத்திலிருந்து சேவையைத் தொடங்கும்.

ஐந்து ஆண்டுகால ஒப்பந்தத்தின்கீழ் கோ-அஹெட் சிங்கப்பூர் நிறுவனம் தெம்பனிஸ் பேருந்து முனையம், தெம்பனிஸ் கான்கோர்ஸ் பேருந்து முனையம், தெம்பனிஸ் நார்த் பேருந்து முனையம், சாங்கி பிசினஸ் பார்க் பேருந்து முனையம் ஆகியவற்றையும் நிர்வகிக்கும்.

2016ஆம் ஆண்டு முதல் தெம்பனிஸ் வட்டாரத்தில் எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்துச் சேவை வழங்கி வருகிறது.

தெம்பனிஸ் வட்டாரத்திற்கான ஐந்து ஆண்டு ஒப்பந்தப் புள்ளியை கோ-அஹெட் சிங்கப்பூர் 646 மில்லியன் வெள்ளிக்குப் பெற்றது.

தெம்பனிஸ் வட்டாரத்தில் உள்ள 27 பேருந்துப் பாதைகளில் கோ-அஹெட் சிங்கப்பூர் நிறுவனம் பேருந்துச் சேவை வழங்கும்.

புதிய ஒப்பந்தம் முடிந்த பிறகு அதை இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள்வரை நீட்டிக்க நிலப் போக்குவரத்து ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.

தெம்பனிஸ் வட்டாரத்தின் பேருந்துச் சேவைக்கான ஏலத்தில் எஸ்பிஎஸ் டிரான்சிட் (596 மில்லியன் வெள்ளி), எஸ்எம்ஆர்டி (613 மில்லியன் வெள்ளி), டவர் டிரான்சிட் (617 மில்லியன் வெள்ளி) ஆகியவை கலந்துகொண்டன. ஆனால் அவை கோ-அஹெட் நிறுவனத்தின் ஏலத் தொகையைவிடக் குறைவு.

கோ-அஹெட் நிறுவனம் 2016ஆம் ஆண்டு முதல் சேவை வழங்கி வருகிறது. தற்போது லோயாங் பேருந்து வட்டாரத்தில் சேவை வழங்கி வருகிறது. பொங்கோல், பாசிர் ரிஸ் பேருந்து முனையங்களையும் அது நிர்வகித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்