அமெரிக்க மத்திய வங்கி குறுகிய காலத்தில் வட்டி விகிதங்களை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்புகளை வர்த்தகர்கள் குறைத்துக்கொண்டதால், எட்டு மாதங்களில் இல்லாத மிகப்பெரிய வாராந்தர வீழ்ச்சியிலிருந்து தங்கம் மீண்டுள்ளது.
கடந்த வாரம் 9 விழுக்காடு சரிந்து 14 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச விலையை எட்டிய தங்கம், பின்னர் 1.3 விழுக்காடு வரை உயர்ந்து ஓர் அவுன்சுக்குக் கிட்டத்தட்ட 3,582 அமெரிக்க டாலராகப் பதிவானது.
செயற்கை நுண்ணறிவுத் துறைக்கான செலவினங்கள் குறித்த கவலைகள் சந்தைகளில் அதிகரித்து, தொழில்நுட்பப் பங்குகள் கடுமையாகச் சரிந்ததைத் தொடர்ந்து, நிதிக் கொள்கை இறுக்கமாக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகளை வர்த்தகர்கள் குறைத்து வருகின்றனர்.
பங்குச் சந்தை சரிவைத் தொடர்ந்து, அண்மைய பணவீக்கத் தரவுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக மத்திய வங்கி நிதிக் கொள்கையை அளவுக்கு அதிகமாக இறுக்கினால், அது அமெரிக்கப் பொருளியலுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார்.
உயர்ந்திருந்த நீண்டகாலக் கடன் செலவுகளைக் கட்டுப்படுத்த அவர் முன்னதாக எடுத்த முயற்சியால், ஆகஸ்ட் மாதத்தில் பத்திர வருவாய் குறைந்து தங்கத்தின் விலையில் குறுகியகால ஏற்றம் ஏற்பட்டது.
