சீனத் திரைப்படத்தின் கூடுதல் தியோச்சூ மொழிக் காட்சிகளைத் திரையிட அனுமதி கோருகிறது கோல்டன் வில்லேஜ்

சீனத் திரைப்படத்தின் கூடுதல் தியோச்சூ மொழிக் காட்சிகளைத் திரையிட அனுமதி கோருகிறது கோல்டன் வில்லேஜ்

1 mins read
3f34964f-f4ef-405c-8eed-ffaecf1536d7
‘டியர் யூ’ திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி. - படம்: கோல்டன் வில்லேஜ்

கோல்டன் வில்லேஜ் நிறுவனம், ‘டியர் யூ’ என்ற சீனத் திரைப்படத்தின் தியோச்சூ மொழிக் காட்சிகளின் எண்ணிக்கையை அடுத்த சில வாரங்களில் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

இப்படத்தின் மேலும் 50 தியோச்சூ மொழிக் காட்சிகளைத் திரையிடுவதற்கு அனுமதி கோரி, தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்திடம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கோல்டன் வில்லேஜ் திங்கட்கிழமை (ஜூன் 22) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இப்படத்திற்காக ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 16 தியோச்சூ மொழிக் காட்சிகளுக்கான நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில், தற்போது கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.

விவோசிட்டி கோல்டன் வில்லேஜ் திரையரங்குடன், புறநகர்ப் பகுதிகளில் உள்ள திரையரங்குகளிலும் கூடுதல் காட்சிகளைத் திரையிட விரும்புவதாகவும் இதன்மூலம் புறநகர்ப் பகுதிகளில் வசிப்போரும் திரைப்படத்தைக் காண முடியும் என்றும் கோல்டன் வில்லேஜ் குறிப்பிட்டது.

விவோசிட்டி கடைத்தொகுதியின் இணையப்பக்கத்தின் தகவலின்படி, 602 இருக்கைகளைக் கொண்ட ‘ஜிவி மேக்ஸ்’ திரையரங்கில் ‘டியர் யூ’ திரைப்படத்தின் தியோச்சூ மொழிப் பதிப்பு தற்போது திரையிடப்பட்டு வருகிறது.

இப்படத்தின் விநியோகிப்பாளர் விண்ணப்பிக்கும் பட்சத்தில், கூடுதல் தியோச்சூ மொழிக் காட்சிகளைத் திரையிடுவதற்குத் தேவையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு அண்மையில் அறிவித்ததைத் தொடர்ந்து, கோல்டன் வில்லேஜ் மேற்கண்ட அறிக்கையை வெளியிட்டது.

குறிப்புச் சொற்கள்