சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தின் ‘கிட்ஸ்வோர்ல்டு’ சிறுவர் அனுபவப் பகுதியில் வாழ்ந்த ‘படி’ (Buddy) என்ற நாய், செவ்வாய்க்கிழமையன்று இறந்தது.
‘கோல்டன் ரிட்ரீவர்’ வகையைச் சேர்ந்த ஒன்பது வயது ‘படி’ இறக்கும் தறுவாயில் அதன் பராமரிப்பாளர்களும் நண்பர்களும் அதைச் சூழ்ந்திருந்ததாக மண்டாய் வனவிலங்கு காப்பகம் இன்ஸ்டகிராம் காணொளி ஒன்றில் குறிப்பிட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘படி’ இரு வகை லிம்போமா எனப்படும் ஒருவிதப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது என்பதைக் கண்டறிந்ததாகவும் அன்றிலிருந்து அதற்கான சிகிச்சைகளும் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் கூறப்பட்டது.
நோயை எதிர்த்து ‘படி’ கடுமையாகப் போராடியதாகவும் மற்றவர்களை மகிழ்விக்கும் ஒளியாக அது திகழ்ந்ததாகவும் காப்பகத்தைச் சேர்ந்த நிர்வாகி குறிப்பிட்டார்.

