நியாயமான வாய்ப்புக் கிடைக்க அனைவருக்கும் அரசாங்கம் உதவும்: டான் சீ லெங்

நியாயமான வாய்ப்புக் கிடைக்க அனைவருக்கும் அரசாங்கம் உதவும்: டான் சீ லெங்

2 mins read
7bb0b7f5-91fa-4fb2-8c4e-2a3b7da0ab8c
வர்த்தக, தொழில் அமைச்சர் (எரிசக்தி, தொழில்துறை) டான் சீ லெங் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (ஆகஸ்ட் 5) பேசினார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு
Google News Preferred Icon

நம்பகமான, வெளிப்படையான பொருளாதாரத்தை நிலைநாட்டுவதில் அரசாங்கம் அதன் பங்கை ஆற்றும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் (எரிசக்தி, தொழில்துறை) டான் சீ லெங் கூறியிருக்கிறார். அத்துடன் நீண்டகாலத்திற்கு முதலீடு செய்வதில் அது தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றார் அவர்.

ஆற்றல், நிதி, சந்தை வாய்ப்புகளில் உள்ள இடைவெளிகளைக் களைந்து, மாற்றத்திற்குத் தயாராக ஊழியர்களுக்கு அரசாங்கம் உதவும் என்றும் டாக்டர் டான் தெரிவித்தார்.

“மற்றவர்களும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும். வணிகங்கள் தங்களை மாற்றியமைத்துக் கொண்டு ஊழியர்களில் முதலீடு செய்ய வேண்டும்; ஊழியர்கள் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும்; தொழில்முனைவர்கள் உருவாக்கவும் போட்டியிடவும் விடாமுயற்சியுடன் செயல்படவும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவும் வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.

ஒவ்வொரு தொழிலும் வெற்றியடையும் என்றோ ஒவ்வொரு வேலையும் ஒரே நிலையில் இருக்கும் என்றோ அந்த மாற்றங்கள் சிரமமற்றதாக இருக்கும் என்றோ அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்க முடியாது என்றார் அமைச்சர் டான்.

ஆனால், ஒவ்வொரு நபருக்கும் நியாயமான வாய்ப்பு கிடைக்கக்கூடிய ஒரு சூழலை அரசாங்கத்தால் அமைக்கமுடியும் என்று அவர் கூறினார்.

கிட்டத்தட்ட ஒன்பது மணி நேர விவாதத்திற்குப் பிறகு, நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங் ஒவ்வொரு திருத்தத்தின்மீதும் அவையில் வாக்கெடுப்பு நடத்தினார்.

அவையில் இருந்த 12 பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானத்தின் முதல் திருத்தத்திற்குத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மற்ற திருத்தங்கள் எவ்வித எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப்பட்டன.

அதன்பின், பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்த திருத்தப்பட்ட தீர்மானத்தின்மீது வாக்களிக்குமாறு திரு சியா அவையைக் கேட்டுக்கொண்டார். இருப்பினும், அவை அந்தத் திருத்தப்பட்ட தீர்மானத்தை உறுதிசெய்து நிறைவேற்றியது.

குறிப்புச் சொற்கள்
ஊழியர்கள்வாய்ப்புநாடாளுமன்றம்