‘கவ்டெக்’ தொடர்ந்து மேம்பட வேண்டும்: லீ சியன் லூங்

‘கவ்டெக்’ தொடர்ந்து மேம்பட வேண்டும்: லீ சியன் லூங்

1 mins read
99a51723-7ce6-4503-95af-dc1d2e85688f
பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் உள்ள ‘கவ்டெக்’கின் புதிய அலுவலகத்துக்குத் திரு லீ வெள்ளிக்கிழமை (ஜூலை 24 நேரில் சென்று பார்வையிட்டார். சிங்கப்பூரின் மின்னிலக்கச் சேவைகளைப் பராமரிக்கும் ஊழியர்களை அவர் அங்கு சந்தித்துப் பேசினார். - படம்: லீ சியன் லூங்/ஃபேஸ்புக்

‘கவ்டெக்’ எனப்படும் சிங்கப்பூர் அரசாங்க தொழில்நுட்ப அமைப்பு தொடர்ந்து தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

அப்போதுதான் அரசாங்கத்துக்காக மின்னிலக்கச் சாதனங்களை உருவாக்கும் அதன் ஆற்றல் மேம்படும் என்றார் அவர். கடந்த பத்து ஆண்டுகளாக சிங்கப்பூரின் மின்னிலக்கப் பயணத்துக்கு ‘கவ்டெக்’ பேரளவில் பங்களித்துள்ளதாகத் திரு லீ குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் தொழில்நுட்பத் துறையை மேலும் விரிவாக உருமாற்றும் பங்கு ‘கவ்டெக்’ அமைப்புக்கு உள்ளது.

இணையப் பாதுகாப்பை மேம்படுத்துவது அல்லது மின்னிலக்கச் சாதனங்களை அனைவரும் எளிதில் பயன்படுத்தக்கூடியதாக உருவாக்குவது போன்ற பணிகள் உடனடியாகச் செயப்படவேண்டியவை என்றும் அவ்வாறு செய்வது சவால்மிக்கவை என்றும் என்றார் அவர்.

பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் உள்ள ‘கவ்டெக்’கின் புதிய அலுவலகத்துக்குத் திரு லீ வெள்ளிக்கிழமை (ஜூலை 24 நேரில் சென்று பார்வையிட்டார்.

சிங்கப்பூரின் மின்னிலக்கச் சேவைகளைப் பராமரிக்கும் ஊழியர்களை அவர் அங்கு சந்தித்துப் பேசினார்.

சிங்கப்பூரின் மின்னிலக்க எதிர்காலத்துக்கு ‘கவ்டெக்’ தலைமை தாங்கும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார். பத்தாவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் ‘கவ்டெக்’கிற்கு அவர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்