இந்தோனீசியைவைச் சேர்ந்த ‘கோ டு’ குழுமத்தைக் கொள்முதல் செய்யும் முயற்சியில் கிராப் ஹோல்டிங்ஸ் இறங்கியுள்ளது.
அதனுடன் தொடர்புடையவர்கள் இத்தகவலை வெளியிட்டனர்.
‘கோ டு’ குழுமம் கிராப்பின் போட்டி நிறுவனமும் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோ டு குழுமத்தின் வருமானக் கணக்குகள், ஒப்பந்தங்கள், செயல்முறை ஆகியவற்றை கிராப் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், கொள்முதல் தொடர்பான இணக்கம் இன்னும் எட்டப்படவில்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் கூறினர்.
கொள்முதல் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கிராப்பின் முயற்சி கைகூடும் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது என்று கூறப்படுகிறது.
2021ஆம் ஆண்டு மே மாதத்தில் தனியார் வாடகை கார் சேவை வழங்கும் கோஜெக்கும் மின்வர்த்தகத் தளமான டோக்கோபீடியாவும் இணைந்ததில் ‘கோ டு’ குழுமம் அமைக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
கொள்முதல் பேச்சுவார்த்தை குறித்து கிராப் மற்றும் ‘கோ டு’ நிறுவனங்களின் பிரதிநிதிகள் கருத்துரைக்க மறுத்துவிட்டனர்.