கிராப் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முதலாம் காலாண்டு லாபம், எதிர்பார்ப்பையும் கடந்து US$154 மில்லியனைத் (S$196.6 மில்லியன்) தொட்டுள்ளது.
சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை (மே 5) இந்த விவரங்களைத் தெரிவித்தது.
மார்ச் 31ல் முடிவடைந்த முதலாம் காலாண்டில் அதன் சராசரி லாபம் US$146.3 மில்லியனாக இருக்கும் என்று பொருளியல் பகுப்பாய்வாளர்கள் கணித்திருந்தனர். ஆனால், பதிவான லாபம் அதனையும் மிஞ்சிவிட்டது.
மொத்த வருவாயும் 24 விழுக்காடு அதிகரித்து US$955 மில்லியன் ஆனது. விநியோகப் பிரிவு வருவாய், 23 விழுக்காடு உயர்ந்து US$510 மில்லியனைத் தொட்டது.
கிராப் தனது வருடாந்திர லாபம் US$700 மில்லியனுக்கும் US$720 மில்லியனுக்கும் இடைப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கிறது.
வாடகைக் கார் பயணமும் விநியோகச் சேவைகளும் மீட்சி கண்டு வருவதையே கிராப் நிறுவனத்தின் லாபமும் வருவாயும் உணர்த்துவதாகப் பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.

