காதலி ஏமாற்றிவிட்டதால் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியாத ஆடவர், தனது தாத்தா இறந்துவிட்டார் என்று கூறி மூன்று நாள் சம்பளத்துடன் கூடிய அனுதாப விடுமுறை எடுத்தார்.
அதற்கு போலியான இறப்பு சான்றிதழையும் அவர் ஏற்பாடு செய்தார்.
29 வயதான பரத் கோபால், போலிச் சான்றிதழ் தயாரித்து மோசடி செய்த குற்றத்தை புதன்கிழமையன்று (பிப்ரவரி 5) நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
அதையடுத்து அவருக்கு 4,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை அனுதாப விடுமுறை எடுத்தார்.
அவரது குற்றச் செயல் வெளிச்சத்திற்கு வரும் என்று அறிந்த கோபால் டிசம்பர் மாதமே வேலையில் இருந்து விலகினார். இருப்பினும் அவரது நிறுவனம் நடத்திய விசாரணையில் கோபால் சிக்கிக்கொண்டார்.
போலியான இறப்புச் சான்றிதழ் தயார் செய்த குற்றத்திற்கு 10,000 வெள்ளி வரையிலான அபராதம், 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.