ஆயர் ராஜா விரைவுச்சாலையில் (ஏஒய்இ) சரக்கு லாரி ஒன்று சரளைக் கற்களைக் கொட்டியதை அடுத்து அந்த விரைவுச்சாலை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் போக்குவரத்திற்கு மூடப்பட்டிருந்தது.
மரினா கடலோர விரைவுச்சாலையை (எம்சிஇ) நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் விபத்து நடந்தது குறித்து தெரிவிக்கப்பட்டதாகக் காவல்துறை கூறியது.
சாலையில் சறுக்கிச் சென்றதாக நம்பப்படும் அந்த லாரியை ஓட்டிய 49 வயது ஆடவர், விசாரணைக்கு உதவி வருவதாகக் காவல்துறை கூறியது.
ஓட்டுநருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டபோதும் அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார்.
விரைவுச்சாலைத் தடங்களில் ஒன்றின் போக்குவரத்து, குறைந்து ஆறு மணி நேரம் பாதிக்கப்பட்டதாக நிலப்போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
இந்தச் சம்பவத்தால், மத்திய விரைவுச்சாலைக்குப் பிந்திய வெளிவாயிலுக்குப் பிறகுள்ள விரைவுச்சாலை போக்குவரத்திற்கு மூடப்பட்டது.
சம்பந்தப்பட்ட சரக்கு லாரி, விரைவுச்சாலையின் ஆக வலது தடத்தின் பக்கவாட்டில் விழுந்ததாக ‘எஸ்ஜிரோட் புளோக்ஸ்’ டெலிகிராம் குழுவில் பதிவான காணொளி ஒன்று காட்டுகிறது.