தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விலை மலிவான உணவு பற்றி அறிய புதிய இணையத்தளம்

1 mins read
46a5e567-9637-4774-9914-b015f377b5b1
‘BudgetMealGoWhere’ இணையத்தளத்தைப் பயன்படுத்தி அருகிலுள்ள காப்பிக்கடைகளில் கிடைக்கும் விலை மலிவான உணவுகள் பற்றித் தெரிந்துகொள்ளலாம். - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரர்களின் வாழ்க்கைச் செலவினங்களைக் குறைப்பதற்கு உதவும் புதிய முயற்சியான ‘மாபெரும் மலிவுக் கட்டண உணவு வேட்டை’ அதிகாரத்துவமாக செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

இதன்மூலம் மக்கள் $3.50 அல்லது அதற்கும் குறைவான விலையில் காப்பிக்கடைகளில் விற்கப்படும் உணவு குறித்து ‘BudgetMealGoWhere’ எனும் இணையத்தளத்தில் (www.go.gov.sg/budgetmeal) தெரிந்துகொள்ளலாம்.

இந்த முன்னோடி முயற்சியை அரசாங்கம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தின் பிற்பாதியில் தொடங்கியது.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பும் இணைந்து இம்முயற்சிக்காக பொதுமக்களின் கருத்துகளைத் திரட்டின.

அந்தக் கருத்துகள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பட்டியல் ‘BudgetMealGoWhere’ இணையத் தளத்தில் செவ்வாய்க்கிழமை முதல் பதிவேற்றப்பட்டதாக அவ்விரு அமைப்புகளும் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.

தீவு முழுவதும் 310 காப்பிக்கடைகளில் 2,500க்கும் மேற்பட்ட விலை மலிவான உணவு விற்கப்படுகின்றன.

சமைத்த உணவு உட்பட வாழ்க்கைச் செலவீனங்களைச் சமாளிப்பது சிங்கப்பூரர்களுக்கு மிகவும் சவாலாக இருக்கிறது என்பதை அரசாங்கம் நன்கு அறிந்திருப்பதாக வெளியுறவு மற்றும் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் பெண்டமியரில் உள்ள நகர உணவங்காடியில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.

“பொதுமக்கள் மிகவும் மலிவு விலையில் உணவு, பானங்கள் கிடைக்கும் காப்பிக் கடைகள் பற்றி நன்கு அறிந்திருப்பதை நாங்கள் அறிவோம். அவர்களை அந்த மலிவு விலை உணவுகள் மற்றும் பானங்கள் குறித்த விவரங்களை எங்கள் இணையத் தளத்தில் பட்டியலிட ஊக்குவிக்க விரும்புகிறோம்,” என்று திருவாட்டி சிம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்