தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செலவுகளைச் சமாளிக்க டாக்சி நிறுவனங்களுக்குக் கூடுதல் நீக்குப்போக்கு

1 mins read
d37f3cfe-4cf8-4265-9291-72424507ac2b
சிங்கப்பூரின் டாக்சி எண்ணிக்கை தொடர்ந்து குறைவதைக் கட்டுப்படுத்தப் புதிய மாற்றங்கள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

டாக்சி நிறுவனங்கள் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ஒப்புதலுடன் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட டாக்சிகளை விற்க அனுமதிக்கப்படும்.

அத்துடன், ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை டாக்சிகளாக மாற்றவும் அனுமதிக்கப்படும்.

டாக்சி, தனியார் வாடகை வாகனப் போக்குவரத்துப் பிரிவில் செய்யப்பட்டுள்ள மிக அண்மைய மாற்றங்களில் இவை அடங்கும். இந்த மாற்றங்களின்வழி செலவுகளைச் சமாளிக்க நிறுவனங்களுக்கு உதவுவதோடு சிங்கப்பூரின் டாக்சி எண்ணிக்கை தொடர்ந்து குறைவதைக் கட்டுப்படுத்தவும் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் போக்குவரத்து அமைச்சின் வரவுசெலவுத் திட்ட விவாதம் மார்ச் 5ஆம் தேதி நடந்தபோது இத்தகைய மாற்றங்களால் டாக்சிகளுக்கும் தனியார் வாடகை வாகனங்களுக்கும் உள்ள வாய்ப்புகளைச் சமமாக்க முடியும் என்று போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் தெரிவித்தார்.

மேலும், செலவுகளைச் சமாளிப்பதிலும் டாக்சி எண்ணிக்கையை அதிகமாக்குவதிலும் டாக்சி நிறுவனங்களுக்குக் கூடுதல் நீக்குப்போக்கு வழங்கப்படும் என்றார் அவர்.

பயணிகளின் தேவையை நிறைவுசெய்வதில் தொடர்ந்து டாக்சிகள் முக்கியப் பங்கு வகிப்பதாக டாக்டர் கோ குறிப்பிட்டார். சிங்கப்பூரில் 2014ஆம் ஆண்டில் இருந்த டாக்சிகளின் எண்ணிக்கை 28,700. அந்த எண்ணிக்கை 2025ஆம் ஆண்டின் ஜனவரி இறுதியில் 13,000 என நிலப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட ஆக அண்மைய தரவுகள் காட்டுகின்றன.

குறிப்புச் சொற்கள்