தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லிட்டில் இந்தியாவில் தவித்த இந்தியச் சுற்றுப்பயணிகள்

1 mins read
594f829c-29fa-4096-b9ac-f89451c1b9ca
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 3

இந்தியாவின் கர்நாடாக மாநிலத்தில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த சில சுற்றுப்பயணிகள் ஹோட்டல் அறைகள் இல்லாமல் லிட்டில் இந்தியாவில் இன்று தவித்துள்ளனர்.

லிட்டில் இந்தியா பகுதியில் மதிய உணவை சாப்பிட்ட பிறகு கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் ரேஸ்கோர்ஸ் சாலையில் இருந்த புல்வெளியில் பயணபைகளுடன் அவர்கள் அமர்ந்திருந்ததை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் புகைப்படங்கள் காட்டின.

சுற்றுப்பயணிகளில் சிறு பிள்ளைகள் இருந்ததையும் காணமுடிந்தது.

பிறகு மாலை 5:30 மணியளவில் சுற்றுப்பயணிகளை பீச் ரோட்டில் உள்ள டிராவல்டைன் ஹோட்டலுக்குச் சென்றனர்.

கிட்டத்தட்ட 100 சுற்றுப்பயணிகள் 71 அறைகளை முன்பதிவு செய்துள்ளனர், ஆனால் ஹோட்டல் அறைகளுக்கான தொகை செலுத்தப்படாத காரணத்தால் ஏறத்தாழ மூன்று மணி நேரம் அவர்களுக்கு அறைகள் ஒதுக்கப்படவில்லை என்று டிராவல்டைன் ஹோட்டல் தமிழ்முரசிடம் கூறியது.

விதிமுறைகளின்படி அறைக்கான கட்டனத்தை செலுத்தியபிறகுதான் தங்குவோர் அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று டிராவல்டைன் விளக்கியது.

குறிப்புச் சொற்கள்