தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொடர்ந்து ஐந்தாவது மாதமாக சில்லறை விற்பனைத் துறை ஏற்றம்

2 mins read
d91397a0-c68e-4847-9ed3-0854a1f4e277
சில்லறை விற்பனைத் துறை தொடர்ந்து ஐந்தாவது மாதமாக ஏற்றம் கண்டுள்ளது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சில்லறை விற்பனைத் துறை தொடர்ந்து ஐந்தாவது மாதமாக ஏற்றம் கண்டுள்ளது.

இந்த ஏற்றத்திற்கு உணவு, மதுபானம், கணினி, தொலைத்தொடர்புக் கருவிகள் போன்ற பொருள்களின் விற்பனை உயர்வே ஒரு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.

ஆயினும், ஆண்டு அடிப்படையில் சில்லறை விற்பனைத் துறையின் வளர்ச்சி சரிவுகண்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 12.5 விழுக்காடாகவும் மே மாதம் 1.8 விழுக்காடாகவும் இருந்த அவ்வளர்ச்சி, ஜூன் மாதத்தில் 1.1 விழுக்காடாக இறங்கியது.

மாதாந்திர அடிப்படையிலும் சில்லறை விற்பனைத் துறை வளர்ச்சி தொடர்ந்து இறக்கம் கண்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் மே மாதம் 0.2 விழுக்காடும் மே மாதத்தை ஒப்புநோக்க ஜூன் மாதம் 0.8 விழுக்காடும் அத்துறையின் வளர்ச்சி குறைந்தது.

ஜூன் மாதத்தில் மொத்த சில்லறை விற்பனை மதிப்பு கிட்டத்தட்ட $3.8 பில்லியன் எனப் புள்ளிவிவரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கிறது.

அனைத்துலகப் பயணங்கள் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளது. அதைப் பிரதிபலிக்கும் வகையில், உணவு, மது விற்பனை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் சில்லறை வர்த்தகம் அதிகரித்துள்ளது என டிபிஎஸ் வங்கியின் பொருளியல் ஆய்வாளர் சூவா ஹான் டெங் தெரிவித்தார்.

மேலும், ஃபார்முலா ஒன் கார் பந்தயம் உள்ளிட்ட பெரிய அளவிலான நிகழ்வுகள் சிங்கப்பூரில் நடக்கவுள்ளன. சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வருவோர் எண்ணிக்கை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி வருகிறது. இவை அனைத்தும் நாட்டின் சில்லறை விற்பனைத் துறை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என நாங்கள் எண்ணுகிறோம்,” என்று திரு டெங் கூறினார்.

கணினி, தொலைத்தொடர்புக் கருவிகள் விற்பனை 9.4 விழுக்காடும் கண்ணாடிப் பொருள்கள், புத்தகங்களின் விற்பனை 8.7 விழுக்காடும் உயர்வுகண்டன.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, உணவு, பானச் சேவைகள் துறை வளர்ச்சி கண்டுள்ளது.

ஆயினும், ஆண்டு அடிப்படையில் 2022 ஜூன் மாதத்தைக் காட்டிலும் இவ்வாண்டு ஜூன் மாதத்தில் உணவு, பானச் சேவைகள் துறை 7.2 விழுக்காடு உயர்வு கண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்