2.4 கிலோமீட்டர் ஓட்டத்தில் உள்ளூர் சாதனை படைத்த கூர்கா வீரர்

1 mins read
807745f1-0bec-4a56-90fb-834ab62c4e1a
-

சிங்கப்பூர் கூர்கா படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் 2.4 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உள்ளூர் சாதனை படைத்துள்ளார். அவர் எடுத்துக்கொண்ட நேரம் 6 நிமிடங்கள் 45 வினாடிகள். தேசிய சேவையாளர்கள் அனைவரும் கட்டாயம் செய்துகொள்ளும் தனிநபர் உடலுறுதிச் சோதனையில் சுபாஸ் குரூங் இந்தச் சாதனையை படைத்துள்ளார்.

ஓட்டத்துக்கு முன்னால் அவர் 60 புக்ஷ்அப் (push-up) பயிற்சியையும் 60 சிட் அப்ஸ் (sit-ups) பயிற்சியையும் செய்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது உள்ள 2.4 கிலோமீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தேசிய சாதனை படைத்தவர் ஜீவனேஷ் செளந்தராஜா. அவர் எடுத்துக்கொண்ட நேரம் 6 நிமிடங்கள் 50 வினாடிகள். சென்றாண்டு ஆகஸ்ட் மாதம் பொக்காரி (Pocari) 2.4 கிலோமீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அவர் அந்தச் சாதனையை படைத்தார்.

நேப்பாளத்தில் பிறந்து வளர்ந்த குரூங் சிங்கப்பூர் கூர்கா படையில் கடந்த ஏழு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். உலகின் ஆக வலிமைமிக்க வீரர்கள் என்ற பெருமையை பெற்றவர்கள் கூர்கா வீரர்கள்.

View post on TikTok