ஊடக இணையவாசலான ‘கட்ஸி ஏஷியா’வும், ஃபேஸ்புக்கிலும், ‘எக்ஸ்’ தளத்திலும் உள்ள அதன் சமூக ஊடகப் பக்கங்களும், இணையவழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (பொஃப்மா), ‘டிக்ளேர்ட் ஆன்லைன் லோகேஷன்ஸ்’ எனப்படும் பிரகடனப்படுத்தப்பட்ட இணையத்தளங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆறு மாதங்களில் அதன் இணையக் கணக்குகளுக்கு மூன்று பொஃப்மா உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ ஜூன் 11ஆம் தேதி அந்தப் பிரகடனத்தை அறிவித்தார்.
அந்தப் பிரகடனம் ஜூன் 12 முதல், 2026ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி வரை ஈராண்டுகளுக்கு நீடிக்கும்.
இந்தக் காலகட்டத்தில், ‘கட்ஸி ஏஷியா’ இணையத்தளம், அதன் ஃபேஸ்புக் பக்கம், ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பக்கம் ஆகியவற்றில், அவை பிரகடனப்படுத்தப்பட்ட இணையத்தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடும் தகவல் இடம்பெற்றிருக்க வேண்டும்.

