‘ஜிஎக்ஸ்எஸ்’ மின்னிலக்க வங்கிக்கு சிங்டெல் மற்றும் கிராப் இணைந்து 229.5 மில்லியன் வெள்ளி முதலீடு செய்துள்ளன.
கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் ஆவணங்களில் முதலீடு குறித்து குறிப்பிடப்பட்டிருந்தன.
1 வெள்ளிக்கு ஒரு பங்கு என்ற கணக்கில் கிராப் 191.8 மில்லியன் வெள்ளி கொடுத்துள்ளது. அதேபோல் சிங்டெல் நிறுவனமும் 37.7 மில்லியன் வெள்ளி கொடுத்துள்ளது.
இதற்கு முன்னர் ஜனவரி மாதம் கிராப் ‘ஜிஎக்ஸ்எஸ்’ மின்னிலக்க வங்கிக்கு 145 மில்லியன் முதலீடு வழங்கியதாகவும். சிங்டெல் நிறுவனமும் 90.1 மில்லியன் வெள்ளி முதலீடு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
கடந்த நிதியாண்டில் ‘ஜிஎக்ஸ்எஸ்’ 208.2 மில்லியன் வெள்ளி இழப்பைச் சந்தித்தது. அதற்கு முந்தைய ஆண்டு 132.5 மில்லியன் வெள்ளியை அது இழந்ததாக நிதி அறிக்கைகள் கூறுகின்றன.
இருப்பினும் அதன் லாபம் கடந்த ஆண்டு 16.1 மில்லியன் வெள்ளியாகும். அதற்கு முந்தைய ஆண்டு அது 5.1 மில்லியனாக இருந்தது
இந்நிலையில் வங்கி வாடிக்கையாளர்களின் வைப்புத்தொகை பலமடங்கு பெருகியுள்ளது. தற்போது அது 650.9 மில்லியனாக உள்ளது.