வியட்னாமின் ஹோ சி மின்னில் தலைதூக்கிய கை, கால், வாய்ப்புண் நோய், டெங்கி

வியட்னாமின் ஹோ சி மின்னில் தலைதூக்கிய கை, கால், வாய்ப்புண் நோய், டெங்கி

1 mins read
1473ca7f-5688-4caa-9fcf-a69938d6973d
2026 மார்ச் மாதத்தைவிட ஏப்ரல் மாதத்தில் கை, கால், வாய்ப்புண் நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 163.6 விழுக்காடு அதிகரித்ததாக வியட்னாம் சுகாதாரத் துறை குறிப்பிட்டது. - படம்: வியட்னாம் நியூஸ்

ஹோ சி மின்: வியட்னாமின் ஹோ சி மின் நகரில் கை, கால், வாய்ப்புண் நோய், டெங்கிக் காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

நகரமன்றச் சுகாதாரத் துறையின் புள்ளிவிவரப்படி இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து கை, கால், வாய்ப் புண் நோயாலும் டெங்கிக் காய்ச்சலாலும் பலர் மாண்டுவிட்டனர்.

மார்ச் மாதத்தைவிட ஏப்ரல் மாதத்தில் கை, கால், வாய்ப் புண் நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 163.6 விழுக்காடு அதிகரித்ததாகச் சுகாதாரத் துறை குறிப்பிட்டது.

கடந்த மாதம் வெளிநோயாளிகள், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோர் என 5,243 பேர் கை, கால், வாய்ப்புண் நோயால் பாதிக்கப்பட்டனர்.

இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து ஏப்ரல் நடுப்பகுதிவரை ஹோ சி மின் நகரில் 12,063 பேர் கை, கால், வாய்ப்புண் நோய்க்கு ஆளாகினர். அந்த நோயால் ஐவர் மாண்டனர்.

மே 3ஆம் தேதி கை, கால், வாய்ப்புண் நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,104ஆக அதிகரித்தது.

இதற்கிடையே, டெங்கிக் காய்ச்சலால் இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து ஏப்ரல் நடுப்பகுதிவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்புநோக்க, 71 விழுக்காடு அதிகரித்தது.

ஏப்ரல் நடுப்பகுதியில் டெங்கிக் காய்ச்சலுக்கு ஆளானோர் எண்ணிக்கை 13,738ஆகப் பதிவானது.

மே 3ஆம் தேதி நிலவரப்படி அது 15,935க்கு உயர்ந்தது.

குறிப்புச் சொற்கள்