ஹன்டா கிருமி: தனிமைப்படுத்தப்பட்டுள்ள இருவர்

ஹன்டா கிருமி: தனிமைப்படுத்தப்பட்டுள்ள இருவர்

1 mins read
9abbdf8c-f743-4f75-a612-219aa6cd74de
ஹன்டா கிருமி பாதிப்பு ஏற்பட்ட ‘எம்வி ஹோண்டியஸ்’ சொகுசுக் கப்பலில் பயணம் செய்த இரண்டு சிங்கப்பூர்வாசிகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

ஆண்டிஸ் ஹன்டாவைரஸ் எனும் கிருமிவகை பரவல் பதிவாகியுள்ள ‘எம்வி ஹோண்டியஸ்’ சொகுசுக் கப்பலில் பயணம் செய்த இரண்டு சிங்கப்பூர்வாசிகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த இருவரைப் பற்றி மே 4, 5 ஆம் தேதிகளில் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஆணைபெற்ற தொற்றுநோய் அமைப்பு (சிடிஏ) தெரிவித்துள்ளது.

அவர்கள் இருவரும் தேசிய தொற்றுநோய் சிகிச்சை நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு ஹன்டா கிருமி பாதிப்பு உள்ளதா என்பதற்கான பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. அவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

அவர்களுக்கு ஹன்டா கிருமி இல்லை என பரிசோதனை முடிவுகள் வந்தால், அவர்கள் கடைசியாக கிருமித்தொற்று அபாயத் தேதியிலிருந்து 30 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள். ஏனெனில், பெரும்பாலான ஹன்டா கிருமி பாதிப்புகளுக்கான அறிகுறிகள் இந்தக் காலகட்டத்திற்குள் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனிமைப்படுத்தப்படுவதில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்பு அவர்கள் மீண்டும் பரிசோதிக்கப்படுவார்கள். பின்னர் ஹன்டா கிருமி அறிகுறிகள் தென்படுவதற்கான அதிகபட்ச காலகட்டமான, கடைசியாக கிருமித்தொற்று அபாயத் தேதியிலிருந்து எஞ்சியுள்ள 45 நாள்கள் கண்காணிப்புக் காலத்தின்போது அவர்கள் தொலைபேசி வாயிலான கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுவார்கள்.

சிங்கப்பூரில் இந்த ஹன்டா கிருமிப் பரவலால் மக்களுக்கு ஏற்படும் ஆபத்து குறைவு என்றும் சிடிஏ தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
கிருமித்தொற்றுகப்பல்சிகிச்சை