ஹார் யாசின் (Har Yasin) கல்யாண பிரியாணி உணவகம் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 4ஆம் தேதி அதிகாரபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது.
லிட்டில் இந்தியாவின் 14 கஃப் ரோட்டில் அமைந்துள்ளது ஹார் யாசின் உணவகம்.
ஏறத்தாழ 40 ஆண்டுகள் வரலாறு கொண்ட அந்நிறுவனம் தொடக்கத்தில் உணவகமாகச் செயல்பட்டு வந்தது.
பிறகு உணவு விநியோகத்தில் கால் பதித்து கடந்த சுமார் ஏழு ஆண்டுகளாகக் கல்யாணம், விருந்து நிகழ்ச்சி போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளுக்குத் தனது சேவையை வழங்கி வருகிறது.
மக்களின் பேராதரவில் மீண்டும் உணவகத் துறையில் கால்பதிக்க விரும்பியதாக கூறினார் ஹார் யாசின் நிறுவனத்தின் இயக்குநர் முகமது ஹனீஃபா இக்பால்.
அத்துடன், அவர் நடத்திய மற்றொரு இறைச்சி விநியோக நிறுவனத்திலிருந்து நேரடியாக இறைச்சி கொண்டு வருவதால், அதை தரத்தின் அடிப்படையில் தெரிவு செய்ய முடிகிறது என்றும் தெரிவித்தார்.
பொதுவாக, ஹார் யாசின் பிரியாணி, திருமணங்கள் மற்றும் விருந்துகள் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் மட்டுமே பரிமாறப்பட்டு வந்தது. அதனால்தான், எப்போது வேண்டுமானாலும் வந்து சாப்பிட வேண்டும் என்ற மக்களின் விருப்பத்திற்கேற்ப ஓர் உணவகத்தைத் மீண்டும் தொடங்க முடிவு செய்தோம்,” என்றார் திரு இக்பால்.
பொதுமக்கள் சுலபமாக வந்துப்போகும் இடமாக லிட்டில் இந்திய வட்டாரம் திகழ்வதால் அவர்களின் வசதிக்காக அவ்விடம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அவர்களின் தனித்துவம் வாய்ந்த ‘தம்’ பிரியாணியுடன் சேர்த்து பரோட்டா, மீ கோரேங் உள்ளிட்ட உள்ளூர் உணவு வகைகளும் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள ஹார் யாசின் உணவகத்தில் வழங்கப்படுகின்றன.