சிங்கப்பூர்க் காவல்துறை ஆணையராகத் திரு ஹாவ் குவாங் ஹுவீ, திங்கட்கிழமை (ஜனவரி 5) பதவி ஏற்றார்.
இதற்கு முன்பு 62 வயது திரு ஹூங் வீ டெக் காவல்துறை ஆணையராகப் பதவி வகித்தார். 11 ஆண்டுகள் அந்தப் பதவியை வகித்த திரு ஹூங், பதவி ஓய்வுபெறுகிறார்.
ஓல்டு சுவா சூ காங் சாலையில் உள்ள ஹோம் டீம் பயிற்சிக் கழகத்தில் 46 வயது திரு ஹாவ் காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.
இதற்கு முன்பு காவல்துறையின் பல பிரிவுகளுக்குத் தலைமை தாங்கிய அனுபவம் அவருக்குண்டு.
உள்துறை அமைச்சுத் தலைமையகத்தில் கொள்கை மேம்பாட்டுப் பிரிவின் மூத்த இயக்குநராகவும் திரு ஹாவ் செயல்பட்டார்.

