மலேசியர்கள் ஜோகூருக்குத் திரும்பியதால் உட்லண்ட்சில் சில கடைகளுக்கு வியாபாரம் குறைந்தது

மலேசியர்கள் ஜோகூருக்குத் திரும்பியதால் உட்லண்ட்சில் சில கடைகளுக்கு வியாபாரம் குறைந்தது

1 mins read
cb4132c3-8de2-4ae1-9c6f-dea396e9ded3
மார்சிலிங் மாலில் இன்று உணவருந்திய வாடிக்கையாளர் கூட்டம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

ஈராண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர்-மலேசியா தரைவழி எல்லைகள் முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இங்குள்ள மலேசியர்கள் பலர் ஜோகூர் பாருவிற்குத் திரும்பியுள்ளனர்.

இதனால், தங்களுடைய வருவாய் 30 விழுக்காடு வரை குறைந்திருப்பதாக உட்லண்ட்சில் உள்ள சில உணவங்காடிக்காரர்களும் சில்லறை விற்பனையாளர்களும் கூறியுள்ளனர்.

எனினும், எதிர்வரும் மாதங்களில் மலேசிய ஊழியர்கள் அன்றாடம் சிங்கப்பூருக்கு வந்துசெல்லும்போது தங்களுக்கு வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கும் எனக் கடைக்காரர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 1) மாலை 5 மணி நிலவரப்படி சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே ஏறத்தாழ 33,700 பேர் பயணம் செய்ததாக குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.

அவர்களில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமானோர், அதாவது 27,600 பேர், சிங்கப்பூரிலிருந்து ஜோகூருக்குப் புறப்பட்டனர். ஜோகூர் திரும்பியோரில் பெரும்பாலானோர் மலேசியர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி, துவாஸ் இரண்டாம் இணைப்புப் பாலம், உட்லண்ட்ஸ் கடற்பாலம் வழியாக மேலும் அதிகமானோர் எல்லையைக் கடந்திருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.