வீவக: பிடாடாரி புளோக்கில் உள்ள ஓவியம் ஜப்பானிய மேப்பிள் இலை

பிடாடாரி பேட்டையில் உள்ள விடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக்குகளின் முகப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள இலைகளின் வடிவங்கள் கஞ்சா செடி வடிவங்கள் இல்லை. அது ஜப்பானிய மேப்பிள் இலைகளின் வடிவங்கள் (படம்) என்று வீவக விளக்கமளித்துள்ளது.

அந்த இலையின் வடிவத்தால் ஈர்க்கப்பட்டு அது உட்லீ கிளென் திட்டத்தின் புளோக்குகளின் முகப்பில் வடிவமைக்கப்பட்டது.  2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சமூக ஊடகத்தில் இந்த வடிவமைப்பை பதிவிட்ட பிறகு இது பொதுமக்களிடம் பேசும் பொருளானது. 

சிங்கப்பூரில் கஞ்சா ஒரு தடைசெய்யப்பட்ட போதைப் பொருள். 500 கிராமுக்கு மேல் போதைப் பொருள் கடத்துபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். 

இந்த வடிவமைப்பு அந்தப் பேட்டையின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. முன்னர் அந்தப் பகுதி அல்காஃப் பூங்காவாக இருந்தது. அல்காஃப் பூங்கா சிங்கப்பூரில் ஜப்பானிய பாணியிலான முதல் பூங்காவாகும். ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போது அந்தப் பகுதி போர்க் கைதிகளின் முகாமாக இருந்தது என்று வீவக பேச்சாளர் கூறினார்.

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!