நீண்ட வாரயிறுதியில் கடற்பாலத்தில் போக்குவரத்து நெரிசலை எதிர்பார்க்கலாம்

நீண்ட வாரயிறுதியில் கடற்பாலத்தில் போக்குவரத்து நெரிசலை எதிர்பார்க்கலாம்

1 mins read
028aec98-c301-4dc6-8154-b25eb5ff667f
புனித வெள்ளி விடுமுறையின்போது கடற்பாலத்தில் நிலவிய போக்குவரத்து நெரிசல். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

எதிர்வரும் நீண்ட வாரயிறுதியில் மலேசியா செல்லத் திட்டமிடுவோர், கடற்பாலத்தில் போக்குவரத்து நெரிசலை எதிர்பார்க்கலாம் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் புதன்கிழமை (ஏப்ரல் 27) கூறியுள்ளது.

புனித வெள்ளி வாரயிறுதியில் 436,800க்கும் மேற்பட்ட பயணிகள் சிங்கப்பூர்-மலேசியா தரைவழி எல்லைகளைக் கடந்தனர்.

மே தினம், நோன்புப் பெருநாள் பொது விடுமுறைகளைக் கொண்டுள்ள இந்த நீண்ட வாரயிறுதியில் இன்னும் கூடுதலானோர் எல்லைகளைக் கடப்பர் என ஆணையம் எதிர்பார்க்கிறது.

சோதனைச்சாவடிகளில் குடிநுழைவு நடைமுறைக்குக் கூடுதல் நேரத்தைப் பயணிகள் கருத்தில்கொள்ள வேண்டும் என்றும் உச்ச நேரத்தைத் தவிர்க்கவும் என்றும் ஆணையம் கேட்டுக்கொண்டது.

இவ்வாண்டு மே தினம் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதற்கு அடுத்த நாள் திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை நோன்புப் பெருநாள் என்பதால் அன்றைய தினமும் விடுமுறை நாளாக அமைகிறது.