எஸ்பிஎச் மீடியா நடத்தும் உடல்நல, நல்வாழ்வுக் கருத்தரங்கம்

எஸ்பிஎச் மீடியா நடத்தும் உடல்நல, நல்வாழ்வுக் கருத்தரங்கம்

1 mins read
0052fffe-2b2f-4825-9b4a-570446d10c44
எஸ்பிஎச் உடல்நல, நல்வாழ்வுக் கருத்தரங்கம், மருத்துவ வல்லுநர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி உடல்நலத்திற்கான வழிமுறைகளைப் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பைப் பொதுமக்களுக்கு அளிக்கிறது. - படம்: எஸ்பிஎச் மீடியா

வருமுன் காப்பதே சிறந்தது. அந்தக் கருத்தைப் புரிந்துகொண்டு, முன்னணி மருத்துவர்கள், வல்லுநர்களின் ஆலோசனைகளைக் கேட்டு உடல்நலத்தை மேம்படுத்த எஸ்பிஎச் மீடியா, உடல்நலம், நல்வாழ்வுக்கான ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

கருத்தரங்கின் முக்கிய விவரங்கள்:

  1. நாள்: 19 ஜூலை 2026, ஞாயிற்றுக்கிழமை
  2. நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
  3. இடம்: SPH Media Auditorium, 1000 Toa Payoh North, News Centre, Singapore 318994
  4. கட்டணம்: $10

நேரடி உரைத் தொடர்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் நடத்தப்படும். பங்கேற்பாளர்கள் காலை அல்லது பிற்பகல் அமர்வுகளில் ஏதேனும் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய முடியும்.  

காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடக்கவிருக்கும் காலை அமர்வில் இதய நலம் தொடர்பான இரு உரையாடல்களும் மூட்டு நலத்தை மீட்டெடுக்கும் வழிகளுக்கான ஓர் உரையாடலும் நடைபெறும்.

பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கவிருக்கும் அமர்வில் இயல்பாக முதுமை அடைவது தொடர்பான இரு உரையாடல்களும் மூளையின் செயல்பாடுகளை அதிகரிக்கும் வழிகளைப் பகிர்ந்துகொள்ளும் ஓர் உரையாடலும் நடத்தப்படும்.

கருத்தரங்கில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் இலவசப் பரிசுப் பையும் சுவையான சிற்றுண்டிகளும் வழங்கப்படும்.

கருத்தரங்கைத் தொடர்ந்து, ஜூலை 29, 30 ஆம் தேதிகளில் சன்டெக் சிட்டியில் உடல்நல, நல்வாழ்வுச் சந்தையும் நடைபெறவுள்ளது. உடல்நலம் தொடர்பான பயனுள்ள தகவல்கள், தனிப்பட்ட சலுகைகள், அனைவரும் பங்கேற்கக்கூடிய பல சுவாரசியமான செயல்பாடுகள் போன்றவற்றைக் கொண்டிருக்கும் அச்சந்தைக்கு அனுமதி இலவசம். 

கருத்தரங்கத்திற்கு முன்பதிவு செய்ய எஸ்பிஎச்சின் இணையப் பக்கத்திற்குச் செல்லலாம்.

குறிப்புச் சொற்கள்