கிளெனிகல்ஸ் மருத்துவமனையில் இயங்கிவரும் தானியங்கி இயந்திரங்கள் உண்ணுவதற்கேற்ற குளிர்ந்த புதிய காய்கறிகளைக் கிண்ணங்களில் வழங்கி வருகின்றன.
அந்த இயந்திரத்தில் வைக்கப்பட்டிருக்கும் 15 பொருள்களில் குறைந்தது ஐந்தை ஓர் கலவையாகக் கலந்து 90 வினாடிகளுக்குள் நமக்கு வழங்குகிறது.
இதில் மிகவும் சுவாரசியமான தகவல் என்னவென்றால், அதிலிருந்து நீங்கள் பெறும் அனைத்து உணவின் ஊட்டச் சத்து விகிதங்களும் கேலரி எண்ணிக்கையும் உங்களுக்கு வழங்கப்படும் ரசீதில் அச்சிடப்பட்டிருக்கும்.
அவை அனைத்தும் சிங்கப்பூர் உள்நாட்டு நிறுவனமான ‘ஃபிரஷ்பாட்’ தயாரிப்புகள்.
24 மணி நேரமும் ஆரோக்கியமாக உண்ணக்கூடிய உணவு வகைகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதை அந்த நிறுவனத்தின் நோக்கம்.
வர்த்தகத்தை விரிவுபடுத்த மேலும் பல தனியார் மருத்துவமனைகள், அலுவலக கட்டடங்கள்,பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்நிறுவனம் கூறியது.

