புளூம்பெர்க்கிற்கு எதிரான அமைச்சர்களின் வழக்குகளுக்கான விசாரணை ஏப்ரலில் நடைபெறும்

2 mins read
7742c162-c9f8-4c43-8c29-6632b1806b95
அமைச்சர் டான் சீ லெங். - படம்: சாவ்பாவ்
multi-img1 of 2

ஏப்ரல் மாதம் நடைபெறும் சிவில் வழக்கு விசாரணையில், உள்துறை அமைச்சர் கா. சண்முகம், மனிதவள அமைச்சர் டான் சீ லெங் ஆகியோரின் அவதூறு குற்றச்சாட்டுகளை புளூம்பெர்க் செய்தி நிறுவனம் எதிர்கொள்ள உள்ளது.

பல மாதங்களாக நடந்த வழக்கு விசாரணைகளுக்குப் பிறகு, ஏப்ரல் 7 முதல் 16ஆம் தேதிவரை எட்டு நாள்களுக்கு விசாரணை தேதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று நீதிமன்றப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

‘சிங்கப்பூர் மாளிகை ஒப்பந்தங்கள் பெரிய அளவில் ரகசியமாக மறைக்கப்படுகின்றன’ என்ற தலைப்பில் சிங்கப்பூரில் சொகுசு பங்களா பரிவர்த்தனைகள் குறித்து 2024, டிசம்பர் 12ஆம் தேதி வெளிவந்த புளூம்பெர்க் கட்டுரையில் இடம்பெற்ற கருத்துகள் தொடர்பாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அமைச்சர்களின் 49 பக்க அவதூறு கோரிக்கை அறிக்கைகளின்படி, அவர்கள் தங்கள் சொத்து பரிவர்த்தனைகளை வெளிப்படைத்தன்மையற்ற முறையில், கட்டுப்பாடு இல்லாமல் செயல்பட அவர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதாக இந்தக் கட்டுரை தவறாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் எழுதப்பட்டிருந்தது என்று கூறினர்.

இது தங்களின் பரிவர்த்தனைகளை மறைப்பதற்கும், பணமோசடிக்கான சாத்தியக்கூறுகள் உட்பட ஆய்வுகளைத் தவிர்ப்பதற்கும் இவ்வாறு அந்தக் கட்டுரையில் கூறப்பட்டது என்றும் அமைச்சர்கள் வாதிட்டனர்.

கட்டுரையில் உள்ள புண்படுத்தும் வார்த்தைகள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்றும், தங்களை இழிவுபடுத்தவும், அவர்கள் வகித்து வந்த அமைச்சர் பதவிகளை அவமதிக்கவும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை என்றும் திரு சண்முகமும் டாக்டர் டானும் கூறினர்.

புளூம்பெர்க்கிற்கு எதிரான வழக்குகளில், இரு அமைச்சர்களையும் தவீந்தர் சிங் சேம்பர்ஸ் நிறுவனத்தின் வழக்கறிஞர்களான திருவாட்டி சாம்பவி ராஜாங்கம் திரு சண்முகத்தையும் திரு டேவிட் ஃபாங் செங் யீ, டாக்டர் டானையும் பிரதிநிதிக்கின்றனர்.

திரு சண்முகம் சம்பந்தப்பட்ட வழக்கில் ஆர்.சி.எல்.டி சட்டக் கழகத்தைச் சேர்ந்த திரு டோனவன் ஃபூவும், டாக்டர் டான் சம்பந்தப்பட்ட வழக்கில் அதே நிறுவனத்தைச் சேர்ந்த திரு ரெமி சூ ஜெங் ஸியும் புளூம்பெர்க்கைப் பிரதிநிதிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்