பொன்விழா ஆண்டைக் கொண்டாட சிங்கப்பூர் கேபிள் கார், ஹலோ கிட்டி கைகோப்பு

பொன்விழா ஆண்டைக் கொண்டாட சிங்கப்பூர் கேபிள் கார், ஹலோ கிட்டி கைகோப்பு

1 mins read
53997d67-ef6d-4ad1-8581-4d886783663e
ஹலோ கிட்டி வடிவமைப்பில் சிங்கப்பூர் கேபிள் கார் பெட்டிகள். - படம்: மவுண்ட் ஃபேபர் பொழுதுபோக்குக் குழுமம்
multi-img1 of 2

தங்களது 50வது பிறந்தநாளைக் கொண்டாட சிங்கப்பூர் கேபிள் காரும் ஹலோ கிட்டியும் கைகோத்துள்ளன.

மவுண்ட் ஃபேபர் பீக்கில் இருந்து செந்தோசாவுக்குச் செல்லும் மவுண்ட் ஃபேபர் பாதையில் ஜூன் 1 முதல் டிசம்பர் 31 வரை சிங்கப்பூர் கேபிள் கார், ஹலோ கிட்டி கம்பிவட கார் பெட்டிகளைச் செயல்பாட்டில் கொண்டிருக்கும்.

ஏழு ‘ஸ்கைஆர்ப்’ பெட்டிகளைத் தவிர்த்து, அப்பாதையில் 67 பெட்டிகள் ஹலோ கிட்டி வடிவங்களைக் கொண்டிருக்கும்.

மவுண்ட் ஃபேபர் பீக்கிற்குச் செல்வோர், 2 மீட்டர் உயரமுடைய ஹலோ கிட்டி சிற்பத்தைக் காணலாம். பொன்விழாவைக் குறிக்கும் வகையில், அது தங்க நிறத்தில் காட்சியளிக்கும்.

சிங்கப்பூர் கேபிள் கார், பிப்ரவரி 15ஆம் தேதி அதன் 50 ஆண்டு நிறைவை எட்டியது. ஹலோ கிட்டி நவம்பர் 1ஆம் தேதி அதன் 50வது பிறந்தநாளைக் கொண்டாடும்.

குறிப்புச் சொற்கள்