வடகொரியாவுக்கு எண்ணெய் வழங்க உதவியவருக்கு 2½ ஆண்டுச் சிறை

வடகொரியாவுக்கு எண்ணெய் வழங்க உதவியவருக்கு 2½ ஆண்டுச் சிறை

1 mins read
a7b9230c-3dab-4e59-9de2-bba79a16dd4d
குவெக் கீ செங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஐக்கிய நாட்டுச் சபையின் தற்காப்பு அமைப்பால் பொருளியல் தடை விதிக்கப்பட்டிருக்கும் வடகொரியாவிற்கு 12,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எரிவாயு எண்ணெய்யை வழங்க ஆடவர் ஒருவர் உதவினார்.

பொருளியல் தடை விதிக்கப்பட்டிருக்கும் நாட்டிற்குப் பெட்ரோலியப் பொருள்கள் விநியோகிப்பது சட்டப்படி குற்றமாகும்.

2019ஆம் ஆண்டு சிங்கப்பூரரான குவெக் கீ செங், அச்செயலைப் புரிந்தார்.

2021ஆம் ஆண்டுஅமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு, அவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் வெகுமதி அளிக்கப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தைவான் தரப்பினருக்காகக் கப்பல்களை வாங்குவது அல்லது வாடகைக்கு எடுப்பது, எண்ணெய் விநியோகிப்பாளர்களைக் கண்டறிவது, விநியோகிக்கப்படும் பொருள்களின் அளவைக் கணக்கிடுவது போன்ற பணிகளில் அவர் ஈடுபட்டார்.

கிட்டத்தட்ட, 6.9 மில்லியன் அமெரிக்க டாலர் (9.5 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி ) மதிப்புள்ள எரிவாயு எண்ணெய்யை வடகொரியாவிற்குச் சட்டவிரோதமாக வழங்க அவர் உதவினார்.

அக்குற்றத்திற்காக 66 வயதான குவெக்கிற்கு 30 மாதச் சிறைத்தண்டனையும் $80,000 அபராதமும் ஏப்ரல் 7ஆம் தேதி விதிக்கப்பட்டது.

ஐக்கிய நாட்டுச் சபை விதித்த தடைகளை மீறியதற்காக மூன்று குற்றச்சாட்டுகளும் குற்றச் செயல்கள் மூலம் ஆதாயங்களைப் பெற்றதற்காக ஒரு குற்றச்சாட்டும் வழக்கின் போக்கை மாற்றியதற்காக ஒரு குற்றச்சாட்டும் அவர்மீது சுமத்தப்பட்டன.

மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை குவெக் ஒப்புக்கொண்டார்.

தீர்ப்பு வழங்கியபோது அவர்மீது சுமத்தப்பட்டிருந்த இதுபோன்ற மேலும் 12 குற்றச்சாட்டுகளும் கருத்தில் கொள்ளப்பட்டன.

குறிப்புச் சொற்கள்