வங்கிக் கணக்குகளை மோசடியாளர்களுக்குக் கொடுத்து உதவியதாகச் சந்தேகத்தின் பேரில் 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்டோபர் மாத இறுதியில் சிங்கப்பூர் முழுவதும் அமலாக்க அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவர்கள் பிடிபட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களின் வயது 15க்கும் 52க்கும் இடைப்பட்டது என்று காவல்துறை அறிக்கைமூலம் தெரிவித்தது.
சந்தேக நபர்கள் மோசடியாளர்கள் கொடுக்கும் பணத்திற்காகத் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை விற்பனை செய்திருப்பார்கள் அல்லது சில காலம் வங்கிக் கணக்கை வாடகைக்குக் கொடுத்திருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில், மோசடி வேலைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகத்தின் பேரில் ஒன்பது பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களின் வயது 16க்கும் 55க்கும் இடைப்பட்டது.
47 பேரும் அக்டோபர் 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையில் சிக்கினர்.

