சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் இயக்குநர் சபையிலிருந்து முன்னாள் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் விலகியுள்ளார். இத்தகவலை ஆணையம் திங்கட்கிழமை (ஜனவரி 5) வெளியிட்டது.
கடந்த 20 ஆண்டுகளாகத் திரு ஹெங்கின் பங்களிப்புக்கு ஆணையத்தின் தலைவர் கான் கிம் யோங் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
ஆணையத்தின் நிர்வாக இயக்குநராகத் திரு ஹெங் 2005ஆம் ஆண்டிலிருந்து 2011ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2008ஆம் ஆண்டு நிதி நெருக்கடியின்போது ஆணையத்தை திரு ஹெங் சிறப்பாக வழிநடத்தியதாகவும் நிர்வாகத்தை வலுப்படுத்த மாற்றங்களை நடைமுறைப்படுத்தியதாகவும் திரு கான் தெரிவித்தார்.
நிதி மையமாக சிங்கப்பூர் கொண்டிருக்கும் நிலையைத் திரு ஹெங் மேம்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
திரு ஹெங், 2019ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை துணைப் பிரதமராகப் பதவி வகித்தார்.
2011ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டு வரை கல்வி அமைச்சராகவும் 2015ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை நிதி அமைச்சராகவும் திரு ஹெங் பதவி வகித்தார்.

