ஹெங்லி நிறுவனத்தில் ஆட்குறைப்பு; சிங்கப்பூரிலும் பாதிப்பு

ஹெங்லி நிறுவனத்தில் ஆட்குறைப்பு; சிங்கப்பூரிலும் பாதிப்பு

1 mins read
447704d5-3386-443a-82a7-ffb339b8f32c
ஈரான் எண்ணெய்யை வாங்கும் நிறுவனங்கள்மீது அமெரிக்கா பல வர்த்தக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.  - படம்: ராய்ட்டர்ஸ்

ஹெங்லி பெட்ரோகெமிக்கல் அனைத்துலக நிறுவனம் சில சிங்கப்பூர் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளது.

ஹெங்லி நிறுவனத்தின் முந்தைய உரிமையாளர்மீது அமெரிக்க அரசாங்கம் வர்த்தகத் தடைகளை விதித்தது. அதன் காரணமாக ஆட்குறைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

சில ஊழியர்கள் வேலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் சிலருக்கு நிறுவனத்திற்குள் வேறு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரில் செயல்படும் ஹெங்லி நிறுவனம் சீனாவின் பெரும் எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எண்ணெய் விநியோகம் செய்துகொண்டிருந்தது. தற்போதைய வர்த்தகத் தடையால் அது பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஈரான் எண்ணெய்யை வாங்கும் நிறுவனங்கள்மீது அமெரிக்கா பல வர்த்தக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தற்போது மத்தியக் கிழக்கில் போர்ப் பதற்றம் தொடர்வதால் ஈரானுக்குப் பல்வேறு வகையான நெருக்கடியை அமெரிக்கா கொடுக்கிறது.

சீனா நேரடியாக ஈரானிடமிருந்து எண்ணெய்யை வாங்குவதில்லை. அது ஹெங்லி போன்ற நிறுவனங்கள்மூலம் அதற்கான எண்ணெய்யை வாங்குகிறது.

குறிப்புச் சொற்கள்