‘தி சென்டர்பாயிண்ட்’ கூட்டு விற்பனைக்கு உயர் நீதிமன்றம் ஒப்புதல்

‘தி சென்டர்பாயிண்ட்’ கூட்டு விற்பனைக்கு உயர் நீதிமன்றம் ஒப்புதல்

படம்: பிரேசர்ஸ் புராப்பர்ட்டி

19 Nov 2026 - 6:34 pm

2 mins read

‘தி சென்டர்பாயிண்ட்’ கட்டடத்தின் குத்தகை அடிப்படையிலான பின்புறத் தொகுதியை $391.9 மில்லியனுக்குக் கூட்டு விற்பனை செய்வதற்கு உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (நவம்பர் 19) ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த விற்பனைக்கு எதிராக இரு ஆட்சேபங்கள் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் கூட்டுரிமைப் பட்டா வாரியம் தடை உத்தரவு பிறப்பித்ததாக நவம்பர் 13ஆம் தேதியன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

வாரியம் தடை உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, சிங்கப்பூரின் முதன்மைக் கடைத்தொகுதிப் பகுதியில் அமைந்துள்ள ஏழு மாடிகளைக் கொண்ட இந்தப் புகழ்பெற்ற சொத்தின் விற்பனைக்கு ஒப்புதல் கோரி கூட்டு விற்பனைக் குழு உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பித்தது.

ஆயினும், விற்பனைக்கு ஆட்சேபம் தெரிவித்திருந்த உரிமையாளர்களான ‘டுரூ அண்ட் நேப்பியர்’ சட்ட நிறுவனத்தால் பிரதிநிதிக்கப்பட்ட டான்சுவான் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனமும் நீதிமன்ற ஆவணங்களில் சின் யுன் ஹீ எனக் குறிப்பிடப்பட்டுள்ள தனிநபரும் வியாழக்கிழமையன்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்கு முன்னதாகத் தங்களது ஆட்சேபங்களை மீட்டுக்கொண்டனர்.

ரகசியக் காப்புக் கடப்பாடுகளைக் காரணம்காட்டி, தமது வாடிக்கையாளரின் ஆட்சேபங்கள் எதைப் பற்றியவை என்பதையோ அல்லது அவை ஏன் மீட்டுக்கொள்ளப்பட்டன என்பதையோ குறித்து கருத்துத் தெரிவிக்க டான்சுவான் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் மறுத்துவிட்டனர்.

முன்னதாக, பிப்ரவரி 26ஆம் தேதியன்று ஃபிரேசர்ஸ் புராப்பர்ட்டி நிறுவனம், தனது முழு உரிமையுடைய துணை நிறுவனமான ஃபிரேசர்ஸ் புராப்பர்ட்டி கப்பேஜ் மூலம் தி சென்டர்பாயிண்ட்டின் குத்தகை அடிப்படையிலான பின்புறத் தொகுதிக்கான $391.9 மில்லியன் வெள்ளி கூட்டு விற்பனை ஏலக் குத்தகையைப் பெற்றது.

ஒப்புக்கொள்ளப்பட்ட பங்கீட்டு முறையின் அடிப்படையில், சில்லறை விற்பனைக் கடை உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் $840,000 வெள்ளி முதல் $9.29 மில்லியன் வரையிலான தொகையைப் பெறுவார்கள். அடுக்குமாடி வீட்டு உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் இறுதிச் சரிசெய்தல்களுக்கு உட்பட்டு, ஒரு வீட்டிற்கு $2.65 மில்லியன் முதல் $7.11 மில்லியன் வரை பெறுவார்கள்.

குறிப்புச் சொற்கள்