கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட தனியார் சுகாதாரக் காப்புறுதிச் சேவைகளில் விருப்பம் அதிகம் காணப்பட்டாலும் அவற்றை வாங்குவோர் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைக்கப்பட்ட ஷீல்டு துணைக் காப்புறுதித் திட்டங்களை (ஐபி ரைடர்) வழங்கும் ஏழு காப்புறுதி நிறுவனங்களில் ஐந்து நிறுவனங்கள், அத்திட்டங்கள்மீது பலர் கூடுதல் விருப்பம் தெரிவித்துள்ளனர் அல்லது அவற்றைப் பற்றி நிறைய கேள்விகளை முன்வைக்கின்றனர் என்று தெரிவித்துள்ளன. அதேவேளை, ஐபி ரைடர் திட்டங்களை வாங்குவோரின் எண்ணிக்கை வலுவாக இருப்பதாக அந்நிறுவனங்களில் மூன்று மட்டுமே தெரிவித்தன.


