பள்ளித் தலைவர்களிடம் உயர் பண்புநெறிகள் அவசியம்: கல்வி அமைச்சு

பள்ளித் தலைவர்களிடம் உயர் பண்புநெறிகள் அவசியம்: கல்வி அமைச்சு

1 mins read
பள்ளித் துணைத் தலைமையாசிரியரின் கள்ளத் தொடர்பு விவகாரம்
efe0506a-a6f3-4d46-b97f-5fc8978367c7
சம்பந்தப்பட்ட துணைத் தலைமை ஆசிரியர் தமது பணியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தைச் சமர்ப்பித்துத் தற்போது விடுப்பில் இருப்பதாகக் கூறப்பட்டது. - படம்: சாவ்பாவ்

பொதுச் சேவைத் துறையின் நாணயத்தையும் நன்மதிப்பையும் கட்டிக்காக்கும் வகையில் பள்ளித் தலைவர்கள் எந்நேரமும் தங்களின் தனிப்பட்ட நடத்தை தொடர்பாக உயர்தரத்தை உறுதிசெய்திட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தொடக்கப்பள்ளி ஒன்றின் துணைத் தலைமை ஆசிரியர் ஒருவர், மாணவரின் பெற்றோருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் அமைச்சு இவ்வாறு கூறியுள்ளது.

கள்ளத் தொடர்பு இருந்ததாக நம்பப்படும் இருவரையும் காட்டும் படங்கள், அவர்களுக்கு இடையே பரிமாறப்பட்ட குறுந்தகவல்கள் ஆகியவை அக்டோபர் 17ஆம் இணையத்தில் பகிரப்பட்டன.

கள்ளத் தொடர்பு குறித்து முதன்முதலாக வெளியிடப்பட்ட பதிவு பின்னர் அக்டோபர் 18ஆம் தேதி அகற்றப்பட்டும், இந்த விவகாரம் இணையத்தில் பேசுபொருளானது.

இது தொடர்பாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய கேள்விகளுக்கு, இந்த விவகாரம் குறித்து அறிந்திருப்பதாகவும் அதை விசாரித்து வருவதாகவும் கல்வி அமைச்சு பதிலளித்தது.

அத்துடன் சம்பந்தப்பட்ட அந்தத் துணைத் தலைமை ஆசிரியர் தமது பணியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தைச் சமர்ப்பித்துத் தற்போது விடுப்பில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்களது நலனை உறுதிசெய்யும் வகையில் பள்ளி தொடர்ந்து கண்காணித்து வருவதுடன் தேவையான ஆதரவையும் அவர்களுக்கு வழங்கும் என்று அமைச்சு குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்