உயரழுத்த மின்கலங்களால் அதிகத் தீ விபத்துகள்

உயரழுத்த மின்கலங்களால் அதிகத் தீ விபத்துகள்

2 mins read
039abb76-c2b5-47bc-bdb9-543fdec350a0
உள்ளெரி இயந்திரம் கொண்ட சாதாரண வாகனங்களுடன் ஒப்பிடுகையில், மின்சார வாகனங்களில் தீ விபத்து ஏற்படுவது அரிதானது என வெளிநாட்டு புள்ளிவிவரங்கள் கூறினாலும், அவற்றை அணைப்பது மிகவும் கடினம் என நிபுணர்கள் கூறுகின்றனர். - படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை/ஃபேஸ்புக்

கடந்த 2025ஆம் ஆண்டில் நிகழ்ந்த நான்கு மின்சார வாகன தீ விபத்துகளில், இரண்டு விபத்துகள் உயரழுத்த மின்கலங்களுடன் தொடர்புடையவை.

மற்றொரு விபத்தில் டேஷ்போர்டில் உள்ள மின்சாரக் கூறுகளால் ஏற்பட்டது. நான்காவது விபத்து, ஒரு மின்சாரக் கழிவு சேகரிப்பு லாரியின் பின்புற அழுத்திக் கருவியுடன் தொடர்புடையது.

2024ஆம் ஆண்டில் ஒரே ஒரு மின்சார வாகனத் தீ விபத்து மட்டுமே பதிவான நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 3) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இதழிடம் தெரிவித்தது.

உயரழுத்த மின்கலம், மின்சார வாகனத்துக்கு மின்னூட்டும் முதன்மை மின்னூட்டியாகும்.

உள்ளெரி இயந்திரம் (internal combustion engine) கொண்ட சாதாரண வாகனங்களுடன் ஒப்பிடுகையில், மின்சார வாகனங்களில் தீ விபத்து ஏற்படுவது அரிதானது என வெளிநாட்டுப் புள்ளிவிவரங்கள் கூறினாலும், அவற்றை அணைப்பது மிகவும் கடினம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

மின்சார வாகனத் தீ சாதாரண வாகனத் தீயை விட அதிக வெப்பத்துடனும் நீண்ட நேரம் எரியக்கூடியதுமாக இருக்கும்.

தீ அணைக்கப்பட்ட பின்னரும் மீண்டும் தீப்பிடிக்கும் வாய்ப்பு இதில் உள்ளது.

தீயை அணைக்கும்போது தண்ணீர் பயன்படுத்தப்பட்டால், மின்சார அமைப்பிலிருந்து மின்சாரத்தால் தாக்கப்படும் அபாயம் உள்ளது.

பிப்ரவரி 11ஆம் தேதியன்று அதிகரித்துவரும் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை குறித்து வருடாந்திரப் புள்ளிவிவர அறிக்கையவெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை இந்தத் தகவல்களை அளித்தது.

இந்த விபத்துகள் மின்னூட்டம் செய்யும்போது ஏற்பட்டதா அல்லது வாகனம் நிறுத்தப்பட்டிருந்தபோது நிகழ்ந்ததா என்பது போன்ற கூடுதல் விவரங்களை அது வெளியிடவில்லை.

எனினும், சிங்கப்பூரில் மின்சார வாகனங்களின் பயன்பாடு பேரளவில் அதிகரித்துள்ளதே இந்த விபத்துகளின் அதிகரிப்புக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தனது அவசரகால கையேட்டில் வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளது.

மின்சார வாகனத்தில் தீப்பிடித்தால், வாகனத்திலிருந்து குறைந்தது 15 மீட்டர் தொலைவுக்கு தள்ளி நிற்க வேண்டும். உடனடியாக 995 எனும் எண்ணை அழைத்து உதவி கோர வேண்டும். வாகனத்தின் எண் அல்லது வகை மற்றும் தீ எங்கு எரிகிறது (முன்பகுதி, நடுப்பகுதி அல்லது வாகனத்தின் அடிப்பகுதி) போன்ற தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்