தோல்வி அடைந்த துவாஸ்பிரிங் திட்டத்தின் எரிசக்தி பாகம் தொடர்பான விவகாரங்களின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் காட்டி, அதற்கு மாறாக ஹைஃபிளக்ஸின் பலத்தை மேற்கோள் காட்டும் உத்தியை அந்நிறுவனத்தின் முதலீட்டாளர் உறவுப் பிரிவு கடைப்பிடித்ததாக வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 21) நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ஹைஃபிளக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஒலிவியா லம்மும் முன்னாள் தலைமை நிதி அதிகாரி சோ வீ பெங்கும் அவ்வாறு செய்யவில்லை என்று திருவாட்டி லம்மைப் பிரதிநிதிக்கும் மூத்த வழக்கறிஞர் தவிந்தர் சிங் வாதிட்டார்.
மின்சார விற்பனை பலவீனம் அடைந்ததால் ஹைஃபிளக்ஸ் நிறுவனம் முடங்கியது. இதன் விளைவாக அந்நிறுவனத்தில் முதலீடு செய்த ஏறத்தாழ 34,000 பேர் பணம் அனைத்தையும் இழந்தனர்.
திட்டம் குறித்த தகவல்கள் தெரிந்து அவற்றை வேண்டுமென்றே வெளியிடவில்லை என்று லம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

