ஈசூனில் உள்ள கட்டுமான இடத்தை $340.9 மில்லியனுக்கு வாங்கிய ஹோய் ஹப் ரியல்டி

ஈசூனில் உள்ள கட்டுமான இடத்தை $340.9 மில்லியனுக்கு வாங்கிய ஹோய் ஹப் ரியல்டி

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Apr 2026 - 9:25 pm

1 mins read

ஈசூன் வட்டாரத்தில் உள்ள மில்டோனியா குளோசில் உள்ள கட்டுமான இடத்தில் எக்சிகியூட்டிவ் கூட்டுரிமைக் குடியிருப்பு கட்டுவதற்கான ஏலத்தை ஹோய் ஹப் ரியல்டி கைப்பற்றியுள்ளது. தனக்கு எதிராகப் போட்டியிட்ட இரண்டு நிறுவனங்களைவிட அதிகத் தொகையை ஹோய் ஹப் ரியல்டி நிறுவனம் ஏலத்தில் முன்வைத்தது.

கட்டுமான இடத்தை 340.9 மில்லியன் வெள்ளிக்கு ஹோய் ஹப் ரியல்டி வாங்கியது. மில்டோனியா குளோஸ் கட்டுமான இடம் 43,264 சதுர அடி கொண்டது. அந்த இடத்தின் குத்தகைக் காலம் 99 ஆண்டுகள். அதில் 430 வீடுகள் கட்டலாம். கட்டுமானத் தளத்தில் உள்ள ஒரு சதுர அடி 732 வெள்ளிக்கு விலைபோனது. பொதுவாக இந்த விலை $650 முதல் $760 வரை இருக்கும். ஹாங் லியோங் குழுமமும் டிஐடி ரெசிடன்சியல் நிறுவனமும் இணைந்து 312 மில்லியன் வெள்ளிக்கு இடத்தை வாங்க விரும்பின. அதாவது ஒரு சதுர அடியை 670 வெள்ளிக்கு வாங்க அது திட்டமிட்டது. ஆனால் அதைவிட ஹோய் ஹப் ரியல்டி அதிகமான ஏலத்தொகையைக் குறிப்பிட்டது. கட்டுமானத் தளம் ரயில் நிலையத்திற்கு அருகே இல்லாததாலும் மேலும் முக்கிய வசதிகள் இல்லாத காரணத்தாலும் ஐந்துக்கும் குறைவான கட்டுமான நிறுவனங்களே ஏலத்தில் கலந்துகொள்ள விரும்பியதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
கட்டுமானம்ஏலம்கூட்டுரிமை