தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீட்டுப் புதுப்பிப்பு: உரிமையாளர் பணம் தந்த பின் காணாமல்போன குத்தகையாளர்

1 mins read
447a96b8-b1b0-4bf0-8da6-d070f291196e
நொவீனா கூரை மேல்வீட்டின் உரிமையாளர் ஒருவர், சென்ற ஆண்டு மே மாதம், தமது வீட்டைப் புதுப்பிக்க ‘ரெனோசேவ்ஸ் புரோஜெக்ட்’ நிறுவனத்தை நாடினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

நொவீனா கூரை மேல்வீட்டின் உரிமையாளர் ஒருவர் தமது வீட்டைப் புதுப்பிக்க $152,000க்கு மேல் செலுத்தியிருந்தார்.

இருப்பினும், ஓராண்டுக்குப் பிறகு, அதற்கான வேலைகள் முடிக்கப்படவில்லை; குத்தகையாளரையும் காணவில்லை.

இன்று, 3,000 சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட அந்த வீடு அலங்கோலமாக உள்ளது.

திரு கே என்று மட்டுமே தம்மை அடையாளப்படுத்திய அந்த வீட்டு உரிமையாளர், சென்ற ஆண்டு மே மாதம், தமது வீட்டைப் புதுப்பிக்க ‘ரெனோசேவ்ஸ் புரோஜெக்ட்’ நிறுவனத்தை நாடினார்.

அந்தப் புதுப்பிப்புப் பணிகளுக்கு $252,000 செலவாகும் என்று அந்நிறுவனத்தைச் சேர்ந்த குத்தகையாளர் ஒருவர் கூறினார்.

சென்ற 2022ஆம் ஆண்டு இறுதியில் வீட்டை வாங்கிய திரு கே, 2023 மே முதல் இவ்வாண்டு ஜூலை வரை முன்பணமாக $152,000 செலுத்தினார்.

இவ்வாண்டு செப்டம்பருக்குள் புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் என்று அந்தக் குத்தகையாளர் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் ஜூலை மாதத்திலிருந்து நான்கு படுக்கையறைகளைக் கொண்ட அந்த வீடு அலங்கோலமான நிலையில் உள்ளதாக திரு கே கூறினார்.

சட்டபூர்வ ஆலோசனையை நாடியிருப்பதாக திரு கே தெரிவித்தார்.

இந்நிலையில், புதுப்பிப்புக் குத்தகையாளர்களுடன் பிரச்சினைகளில் சிக்கியுள்ள பயனீட்டாளர்கள், உதவிக்கு சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தைத் தொடர்புகொள்ளலாம் அல்லது அதன் இணையத்தளத்தை நாடலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்