சிங்கப்பூரில் செப்டம்பர் மாதப் பிற்பாதியில் வெப்பமான வானிலை தொடரும் என்றும் காலை வேளைகளில் சிறிது மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.
மாத இறுதிவாக்கில் பரவலாக இடியுடன்கூடிய மழை பெய்யும் என்றும் அது கூறியது.
அன்றாட வெப்பநிலை 24 டிகிரி செல்சியசுக்கும் 34 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாத இறுதியில் பெரும்பாலான நாள்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யுமெனக் கூறப்பட்டுள்ளது.
மாதப் பிற்பாதியில் சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் மொத்த மழைப்பொழிவு சராசரிக்குமேல் பதிவாகும் என வானிலை ஆய்வகத்தார் முன்னுரைத்துள்ளனர்.

