தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆக்கிரமிப்புக்கு $6 மில்லியன் இழப்பீடு கோரும் ஹோட்டல் மேம்பாட்டாளர்

1 mins read
8143aed5-874d-4225-af39-f3dbb7c92181
கில்லினி 118 கொண்டோமினியம், ஹோட்டல் கட்டுமானப் பகுதி (வலது) - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தமது சொத்து எல்லைக்குள் ஆக்கிரமிப்பு செய்ததாக கில்லினி ரோடு கொண்டோமினிய உரிமையாளர்களிடம் இருந்து $6 மில்லியன் இழப்பீடு கோரியுள்ளார் ஹோட்டல் மேம்பாட்டாளர் ஒருவர்.

30 வீடுகளை உள்ளடக்கிய கொண்டோமினியக் கட்டடம், தாம் ஹோட்டல் கட்டி வரும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனால், ‘கில்லினி 118’ கொண்டோமினியத்தின் உரிமையாளர்களிடம் அந்த மேம்பாட்டாளர் இழப்பீடு கேட்டுள்ளார்.

ஆரம்பத்தில் பெரிதாக இருந்து ஆக்கிரமிப்பை அகற்ற சில திருத்த வேலைகள் அங்கு செய்யப்பட்டன.

ஆக்கிரமிப்பு காரணமாக, தமது ஹோட்டல் மேம்பாட்டுத் திட்டங்களில் 180 நாள் தாமதம் ஏற்பட்டதாகவும் அதனால் $4.5 மில்லியனுக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாகவும் லக்ரம் (கில்லினி) ஹோட்டல் மேம்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்