தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரின் வீட்டுக் கடன் வட்டி விகிதம் இறக்கம்

2 mins read
5490e361-ffef-4978-8c59-759bff4666e3
ஆசிய நாணயங்களைவிட சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு மேலோங்கியிருப்பது, கடன் வட்டி விகிதங்கள் குறைவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.  - படம்: சாவ்பாவ்

ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக சிங்கப்பூர் நாணய ஆணையம் அண்மையில் செய்துள்ள நிதிக் கொள்கை மாற்றத்தை வர்த்தகர்கள் புறக்கணித்ததால் பணச் சந்தையில் வட்டி விகிதங்கள் குறைந்துள்ளன.

வீட்டுக் கடன்களை உள்ளடக்கிய சோரா (SORA) எனப்படும் சிங்கப்பூரின் தினசரி சராசரி விகித அளவீடு மார்ச் 13 அன்று 2.08 விழுக்காடு குறைந்தது. இது கடந்த 2022 டிசம்பரில் இருந்த நிலையை எட்டியுள்ளது. மெதுவடைந்துள்ள கடன் பெறுதல், வெளிநாட்டிலிருந்து வந்துள்ள வைப்புத் தொகை முதலீடுகள், வலுவான உள்நாட்டு நாணய மதிப்பு ஆகியவை ரொக்கப் பயன்பாட்டை போதுமான அளவுக்கு நிலைநிறுத்தி வைத்துள்ளன. மார்ச் 14 அன்று விகித அளவீடு 2.24க்கு உயர்ந்துள்ளது.

சிங்கப்பூர் நாணய ஆணையம், இந்த பரிமாற்ற விகிதத்தை அதன் முக்கிய கொள்கை வகுப்புக்காகப் பயன்படுத்தி வருகிறது. கடந்த 2020 ஜனவரிக்குப் பிறகு ஆணையம் இவ்வாண்டு தொடக்கத்தில் சிங்கப்பூர் நாணயக் கொள்கைகளை முதன்முறையாகத் தளர்த்தியது. அதன்படி வட்டி விகிதங்கள் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என பகுப்பாய்வாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த இறக்கம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், சொத்து சந்தையைக் குளிர்விக்கும் இலக்கு பாதிப்படையக் கூடும் என்பதால் இவ்வாண்டு மத்தியில் கடன் வட்டி விகிதங்கள் குறைவதைக் காண அரசாங்க அதிகாரிகள் தயங்குவார்கள் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த கடன் வட்டி விகிதங்களின் வீழ்ச்சி சிங்கப்பூர் பொருளாதாரத்தின் முக்கிய காலகட்டத்தில் நிகழ்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் கடன் மற்றும் வைப்பு விகிதம் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 70.5 விழுக்காட்டிலிருந்தது. இவ்வாண்டு ஜனவரி மாத நிலவரப்படி 68.2 விழுக்காடாக அது குறைந்துள்ளது.

ஆசிய நாணயங்களைவிட சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு மேலோங்கியிருப்பதும், கடன் வட்டி விகிதத்தின் மதிப்பு குறைவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்