பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பிள்ளைகளுக்கு ஆதரவு

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பிள்ளைகளுக்கு ஆதரவு

2 mins read
4359d108-a598-480f-8835-e8cb08701569
உடல் பாதுகாப்பு குறித்து கற்கும் பிள்ளைகள் தகாத செயல்களை அடையாளம் காணும் சாத்தியம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்டெர்ய்ட்ஸ் டைம்ஸ்

பிள்ளைகளுடன் பழகும் அனைத்து பெரியவர்களுக்கும் அவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதைத் தடுப்பதில் பங்கு உண்டு என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு கூறியுள்ளது.

பள்ளிகள், சமூக சேவை அமைப்புகள், குடும்பங்கள் என எதுவாக இருந்தாலும், பிள்ளைகளுக்குப் பாதுகாப்பான சூழலை அமைத்துக் கொடுப்பதில் பெரியோருக்கும் பங்கு உண்டு என்று அமைச்சின் மருத்துவ, தடயவியல் உளவியல் சேவையின் உதவி இயக்குநரும் தலைமை மருத்துவ உளவியலாளருமான பூஜா ஹேமந்த் கூறினார்.

“குழந்தைப் பாலியல் துன்புறுத்தலைப் பற்றியும், அது சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் நடக்கும் ஒன்று என்பதையும் தெரிந்துகொள்வது நல்லதொரு முதல் படி,” என்று அவர் சொன்னார்.

உடல் பாதுகாப்புத் திறன்களை அறிமுகப்படுத்துதல்

பாலியல் துன்புறுத்தலைத் தவிர்ப்பதற்கான கல்வி பாலர் பருவத்திலிருந்தே கற்றுக்கொடுக்கப்படவேண்டும் என்று சிங்கப்பூர் பிள்ளைகள் மன்றத்தில் இயக்குநராகப் பணியாற்றும் லின் சியாவ்லிங் கூறினார்.

உடல் பாதுகாப்பு குறித்து கற்கும் பிள்ளைகள் தகாத செயல்களை அடையாளம் காணும் சாத்தியம் அதிகம் என்றும் அவர்கள் பாலியல் துன்புறுத்தல் குறித்து யாரிடமாவது சொல்வார்கள் என்றும் அவர் கூறினார்.

கவனம் செலுத்துதல்

உடல்ரீதியான அறிகுறிகள் இருந்தாலும், பல நேரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வித வெளிப்படையான அறிகுறிகளையும் காட்டுவதில்லை என்றார் திருவாட்டி பூஜா.

அவர்கள் ஏதேனும் பிரச்சினையை எதிர்நோக்குகிறார்களா, யாராவது தங்களைக் காயப்படுத்தும் வகையில் எதையாவது செய்கிறார்களா என்று கேட்குமாறு அவர் கூறினார். பிள்ளைகள் அதற்கு ஆமாம் என்று பதில் கூறினால், அவர்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுகிறார்களா என்று கேட்கவேண்டும் எனச் சொன்னார் திருவாட்டி பூஜா.

அதோடு, பெரியவர்கள், பிள்ளைகள் சொல்வதை முக்கியமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்று திருவாட்டி லின் கூறினார்.

குறிப்புச் சொற்கள்