தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்சிகரெட்டுகளில் எட்டோமிடேட்; சோதனைக் கருவி விரைவில் வருகிறது

2 mins read
967d41bb-e971-418c-96d0-b72241aae8e9
ஈசூனில் மின்சிகரெட் விநியோகம் நடக்கிறது என்ற சந்தேகத்தில் அங்குள்ள ஒரு வீட்டில் ஜூன் 23ஆம் தேதி மேற்கொண்ட சோதனையில் மின்சிகரெட் கருவிகள் கைப்பற்றப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மின்சிகரெட்டுகளில் எட்டோமிடேட் என்ற போதைப் பொருளை துரிதமாகக் கண்டுபிடிக்கும் சோதனைக் கருவி விரைவில் வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சிகரெட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் திட்டத்தில் இது மேலும் ஒரு முன்னேற்றம் என்று கூறப்படுகிறது. எட்டோமிடேட்டை சிறுநீர் சோதனையில் கண்டுபிடிக்க இயலாது என அதை விற்பவர்கள் கூறிவருவதால் அதன் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து ஆகஸ்ட் 7ஆம் தேதி கருத்துரைத்த சுகாதாரப் பாதுகாப்பு ஆணைய பேச்சாளர் ஒருவர் விற்பனையாளர்களின் அந்தக் கூற்று தவறானது என்றார்.

எட்டோமிடேட் பயன்பாட்டை துரிதமாகக் கண்டறியும் சோதனைக் கருவியை ஆணையம் மதிப்பீடு செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.

முடி, உமிழ்நீர் போன்றவற்றை சோதிப்பதன் மூலம் எட்டோமிடேட் பயன்பாட்டை கண்டறியும் முறையும் ஆராயப்பட்டு வருவதாக அவர் விளக்கினார்.

தற்பொழுது, எட்டோமிடேட் கலப்பு உள்ள மின்சிகரெட் உட்பட அவை ஆணையத்தின் சோதனைக்கூடங்களில் பரிசோதிக்கப்படுகின்றன என்பது இங்கு நினைவுகூரத்தக்கது

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் சிறுநீர், ரத்தம் போன்றவற்றிலும் எட்டோமிடேட் இருக்கிறதா எனப் பரிசோதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

“சிறுநீர் சோதனையில் எட்டோமிடேட் இருக்கும் அளவுகூட தெரியவரும்,” என்று ஆணையத்தின் அந்தப் பேச்சளார் விளக்கினார்.

போதைப் பொருள் ஒழிப்புச் சட்டத்தில் எட்டோமிடேட்டையும் சேர்க்கும் பணி நடந்து வருவதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் ஜூலை 20ஆம் தேதி கூறியுள்ளார்.

அமலாக்க நடவடிக்கைகளில் கைப்பற்றப்பட்ட 100க்கும் மேற்பட்ட மின்சிகரெட்டுகளில் சிலவற்றை சோதித்ததில் எட்டோமிடேட் இருப்பது தெரியவந்ததை அடுத்து இந்தப் பணி நடந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்