தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொங்கிய நிலையில் வளர்ப்பு நாய் மாண்டது குறித்து விசாரணை

2 mins read
d5a00d9c-7736-4241-b765-09fd61e88f46
ஃபெண்டி என்று அழைக்கப்பட்ட வளர்ப்பு நாய். - படம்: இன்ஸ்டகிராம்/ஹேட்ஸ்ஃபெண்டி

வளர்ப்பு நாய் ஒன்று தொங்கிய நிலையில் மாண்டு கிடந்த சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

செல்லப் பிராணி பராமரிப்பு சேவை நிலையம் ஒன்றில், வளர்ப்பு நாய் உயிரிழந்தது தொடர்பாக தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும் அதனை விசாரித்து வருவதாகவும் தேசிய பூங்காக் கழகத்தின் அமலாக்க, புலன்விசாரணைப் பிரிவு இயக்குநர் ஜெஸிகா கோ தெரிவித்தார்.

இன்ஸ்டகிராம் சமூக ஊடகத் தளத்தில் கடந்த ஜூலை 24ஆம் தேதி காணொளி ஒன்று பதிவேற்றப்பட்டது.

ஒரு அறையில் ஆறு நாய்கள் இருப்பதையும் ஏதோ ஒன்று நிகழ்ந்ததைக் கண்டு அவை குரைக்கத் தொடங்கியதையும் அந்தக் காணொளி காட்டியது. நாய்கள் குரைக்கக் காரணமான சம்பவம் காணொளியில் பதிவாகவில்லை

மேலும், அந்த சமயத்தில் மனிதர்கள் யாரையும் காணொளியில் காண முடியவில்லை.

ஒரு மேசையுடன் இணைத்து கழுத்தில் கட்டப்பட்டு இருந்த பழுப்புநிற நாய் ஒன்று பிற்பகல் 1.42 மணிக்கு மேசையில் இருந்து கீழே விழுந்து தொங்கியது. மீண்டும் மேசை மீது ஏற கிட்டத்தட்ட ஒரு நிமிடம் போராடிய நாயின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இறுதியில், அதன் அசைவு நின்றுவிட்டதை காணொளியில் காண முடிந்தது.

ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி அந்தக் காணொளியை இன்ஸ்டகிராமில் பார்தோரில் 2,500க்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்தனர்.

பெண் ஒருவர் பிற்பகல் 2.17 மணிக்கு அந்த அறைக்குள் நுழைந்து, நாயை நோக்கிச் சென்றதும் கீழே கிடந்த நாயைத் தூக்கி மேசையில் கிடத்திவிட்டு நகர்ந்ததும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பார்வையிட்ட மற்றொரு காணொளியில் பதிவாகி இருந்தது.

வேறொரு நுழைவாயில் வழியாக அறையினுள் நுழைந்த இன்னொரு பெண், அசைவற்றுக் கிடந்த நாயைப் பார்த்தவாறு வெளியேறுவதையும் அந்தக் காணொளி காட்டியது.

குறிப்புச் சொற்கள்