தேசிய தின பொது விடுமுறையை முன்னிட்டு ரயில், பேருந்து சேவைகள் அதற்கு முந்திய நாளான ஆகஸ்ட் 8ஆம் தேதி நீட்டிக்கப்பட உள்ளன.
சிட்டி ஹால் எம்ஆர்டி நிலையத்தில் இருந்து ஜூரோங் ஈஸ்ட், மரினா சௌத் பியர், பாசிர் ரிஸ், துவாஸ் லிங்க் ஆகிய நான்கு வழிகளிலும் செல்லும் கடைசி ரயில்கள் பின்னிரவு 12.30 மணிக்குப் புறப்படும்.
வட்டப் பாதையில், ஹார்பர் ஃபிரண்ட் செல்லக்கூடிய கடைசி ரயில் டோபி காட் நிலையத்தைவிட்டு இரவு 11.55 மணிக்குப் புறப்படும். அதேபோல டோபி காட் செல்லும் கடைசி ரயில் ஹார்பர் ஃபிரண்ட் நிலையத்தில் இருந்து இரவு 11.30 மணிக்குப் புறப்படும்.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில், உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்தில் இருந்து நள்ளிரவில் கடைசி ரயில் கிளம்பும். அதன் எதிர்த்திசையில் சேவையாற்றும் ரயில் கடைசியாக பேஷோர் நிலையத்தைவிட்டு பின்னிரவு 12.12 மணிக்குப் புறப்படும்.
டௌன்டவுன் ரயில் பாதையில் இயங்கக்கூடிய கடைசி ரயில் புக்கிட் பாஞ்சாங் நிலையத்தில் பின்னிரவு 12.03 மணிக்கும் எக்ஸ்போ நிலையத்தில் இருந்து பின்னிரவு 12.04 மணிக்கும் புறப்படும்.
வடக்கு-கிழக்கு ரயில் பாதையில். பொங்கோல் செல்லும் கடைசி ரயில் பின்னிரவு 12.30 மணிக்கு ஹார்பர் ஃபிரண்ட்டில் இருந்து கிளம்பும்.
அதேபோல, ஹார்பர் ஃபிரண்ட் செல்லும் ரயில் கடைசியாக பொங்கோல் நிலையத்தைவிட்டு பின்னிரவு 12.02 மணிக்குப் புறப்படும். புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி சேவையும் சாங்கி விமான நிலையத்திற்கான ரயில் சேவையும் நீட்டிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பேருந்து சேவைகள்
பேருந்து சேவைகளைப் பொறுத்தமட்டில், சுவா சூ காங் பேருந்து நிலையத்தில் இருந்து 300, 301, 302, 307, 983ஏ ஆகிய சேவை எண் தாங்கிய பேருந்துகள் கடைசியாக பின்னிரவு 1.40 மணிக்குப் புறப்படும்.
தொடர்புடைய செய்திகள்
உட்லண்ட்ஸ் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தில் இருந்து 901, 911, 912ஏ, 912பி, 913 ஆகிய சேவை எண் கொண்ட பேருந்துகள் பின்னிரவு 1.25 மணிக்கும் புக்கிட் பாஞ்சாங் பேருந்து நிலையத்தில் இருந்து 920, 922, 973ஏ ஆகிய எண்ணுள்ள பேருந்துகள் அதே 1.25 மணிக்கும் கிளம்பும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

