தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒலிம்பிக்கில் சிங்கப்பூர் பூப்பந்து வீராங்கனை சாதனை:இறுதிப் பதினாறு சுற்றுக்குத் தகுதி

1 mins read
c0e44bc9-3d72-4238-a8b2-2bef211942f0
கால் இறுதிக்கு முந்தைய இறுதி 16 வீரர்களுக்கான சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள இயோ ஜியா மின். - படம்:எஸ்பிஹெச்

பாரிஸ்:மௌரீஷியஸ் உடன் நடந்த பூப்பந்து போட்டியில் சிங்கப்பூரின் இயோ ஜியா மின் வெற்றிபெற்றுள்ளார். அதன்வழியாக, கடந்த 2012க்குப் பிறகு கால் இறுதிக்கு முந்தைய இறுதி 16 வீரர்களுக்கான சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள முதல் சிங்கப்பூர் பூப்பந்து வீராங்கனை என்ற பெருமை இயோவைச் சாரும்.  போட்டி புதன்கிழமை (30 ஜூலை) நடந்தது. 

இதுவரை நடந்து போட்டிகளில், இயோ, பொது அகதிகள் குழுவின் சார்பில் போட்டியிட்ட ஹாலந்தில் வாழும் டோர்சா யாவாரிவாஃபா என்பவரைக் கடந்து, தற்போது மௌரீஷியஸின் கேட் ஃபூ குனேவை 21-12, 21-6  என்ற எண்ணிக்கையில் வென்று குழுப்பட்டியலில் முதலிடத்தை அடைந்துள்ளார்.

கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் அவர் உலகத் தரவரிசையில் 10வது நிலையில் உள்ள ஜப்பானின் அயா ஒஹோரியை சந்திப்பார். இதுவரையில் அயா  ஒஹோரியுடன் மூன்று முறை இதர போட்டிகளில் விளையாடி இயோ தோல்வியுற்றுள்ளார். எனவே ஆகஸ்ட் 1ம் தேதி இருவருக்கும் நடக்கும் கால் இறுதிச் சுற்றுக்கான போட்டி கடுமையாக இருக்கும். 

ஆண்கள் பூப்பந்து போட்டியில், சிங்கப்பூரின் லோ கியென் இயு, எல் சல்வடோரின் உரியல் கஞ்சோராவுடன் ஜுலை 31 அன்று பொருதுகிறார். இப்போட்டியில் லோ வென்றால், அவரும் இறுதி 16 வீரர்களுக்கான சுற்றுக்குத் தகுதிபெறுவார். 

ஆண், பெண் இணை இரட்டையர் பூப்பந்து போட்டியில் சிங்கப்பூரின் டெரி ஹீ, ஜெசிக்கா டான் இருவரும் ஜுலை 29 அன்று நடந்த போட்டியில் குழுப்பட்டியலில் மூன்றாம் இடத்தையே அடைந்ததால் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்